சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
வடிவேலுவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டதையடுத்து, அடுத்த கிரேடில் இருந்த சந்தானம் நம்பர்ஒன் காமெடியனின் நாற்காலியை கைப்பற்றி விட்டார். முன்வரிசையில் இருக்கும் சில ஹீரோக்கள் தங்களுடன் சந்தானமும் கைகோர்த்தால் வெற்றியை எளிதாக கைப்பற்றி விட முடியும் என்று அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு வருகின்றனர். இதனால் இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தை முடிவு செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் டாக்டர் சீனிவாசனுடன் இணைந்து காமெடி செய்திருந்தார் சந்தானம். அது பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகி விட்டது. குறிப்பாக சீனிவாசனின் காமெடி பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. அதனால் அவரையும் தன்னுடன் கூட்டு சேர்த்து கொண்டு அவரை கலாய்த்தபடி நடித்தாலே இன்னும் பத்து வருடத்துக்கு தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துளளார் சந்தானம். இதையடுத்து கலகலப்பு சிவா நடிக்கும் யா யா படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருந்த சந்தானம், இப்போது டாக்டர் சீனிவாசனையும் உள்ளே இழுத்திருக்கிறார். ஆக, கவுண்டமணி செந்திலை கலாய்த்தது போல், இப்போது டாக்டர் சீனிவாசனை சந்தானம் கலாய்க்கும் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிறது.
சும்மா இருந்த வடிவேலுவை திமுகவில் இழுத்து அவரை வீழ்ச்சி அடைய வைத்தது திமுக. இப்போது அதே திமுக முத்தக்கலைஞர் வாரிசு உதவியுடன் திமுகவை சேர்ந்த சந்தானத்தை உச்சிக்கு கொண்டுபோக துடிக்கிறது. சந்தானாத்துக்கு ஒரு வீழ்ச்சி வருமானால் அது திமுகவினால் தான் வரும் என்பதை அவர் உணர்ந்தால் சரி. ஏற்கனவே சந்தானம் எழுத்தாணி கூட்டத்தை சார்ந்தவர் என்பது அனைவர்க்கும் தெரியும். (அதுபோல சும்மா இருந்த பாக்யராஜ் அவர்களையும் இழுத்து வீழ்ச்சிக்கு தள்ளியதும் இதே திமுக தான்)