எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
செகண்ட் இன்னிங்சில் இருக்கும் நயன்தாரா, காமெடியாக நடிக்க ஆசைப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி நடிப்பதில் ஆர்வமாக இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை வைத்து படம் இயக்கி வரும் அத்தனை இயக்குனர்களுமே அவரது கேரக்டரை பக்கா காமெடி கேரக்டராக்கி வருகிறார்களாம். இவர் நடிக்கும் படங்களில் இருக்கும் மற்ற கதாநாயகிகளுக்கு லவ் போர்ஷனை ஒதுக்கி விட்டு, இவரை காமெடி நடிகையாக்கவே முயற்சித்தார்களாம். இதைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் நயன்தாரா.
அதனால் மேற்படி இயக்குனர்களை அணுகி, கதையில் காமெடி இருப்பது தப்பில்லை. எனது கேரக்டரும் காமெடியாக இருப்பதிலும் தப்பில்லை. ஆனால் நான் கதாநாயகி என்பதை மறந்து, என்னை காமெடி பீஸ் ஆக்கி விடாதீர்கள். காமெடியாகவும் நடிக்க விருப்பம் உள்ளது என்றுதான் தெரிவித்தேனே தவிர, காமெடி நடிகையாகவே மாற விருப்பம தெரிவிக்கவில்லை. இப்போதும் டூயட் பாடத்தான் எனக்கு ஆசை உள்ளது என்று தனது காட்சிகளை காமெடித்தனமாக மாற்றிய இயக்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளார் நயன்தாரா. இதனால் கோவை சரளாவுக்கு பிறகு சரியான காமெடி நடிகை இல்லையே என்று நயன்தாராவை காமெடி ட்ரேக்குக்கு மாற்ற நினைத்த இயக்குனர்களின் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.