Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கடலில் காதலும், நெகிழ வைக்கும் கதையும் இருக்கும்! சொல்கிறார் மணிரத்னம்

Maniratnam says about Kadal
ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் கடல். இப்படத்தில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாகவும், ராதா மகள் துளசி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். படத்தின் தலைப்பே கடல், அதனால் கடலை பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இப்படம் பற்றி மணிரத்னம் கூறும்போது, தாமஸ் என்கிற இளைஞனின் கதை தான் கடல். அவன் வாழ்க்கையில் ‌யாரையெல்லாம் சந்திக்கிறான், அவன் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை கடல் படத்தில் சொல்லி இருக்கிறேன். படம் கடல் சார்ந்த கதையை சொல்ல வருவதால் தூத்துக்குடியை பின்னணியாக கொண்டு கதையை தேர்ந்தெடுத்தேன். மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பதிவுகள் இப்படத்தில் இருக்கும். படத்தில் காதல் இருக்கும், அதேசமயம் நெகிழ வைக்கும் கதையும் இருக்கும். ஆக்ஷ்ன் பயங்கரமா இருக்கும், நல்ல பாடல்கள் இருக்கும்.

ஒரு படத்‌தின் கதை மற்றும் அதன் கதாபாத்திரங்களை உணர்ந்து படத்திற்கு புதுமுகங்கள் தேவையா, பழைய முகங்கள் தேவையா என்பதை முடிவு செய்கிறேன். கடல் படத்தை பொறுத்தவரை ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படி கார்த்திக், கவுதமை என்னிடம் அழைத்து வந்தபோது அவன் தான் படத்தின் ஹீரோ தாமஸ் என்று முடிவு பண்ணினேன். பாரதிராஜா எப்படி அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-ராதா ஜோடியை அறிமுகம் செய்தாரோ, அதேப்போன்று ராதா மகள் துளசியை இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்க ‌எண்ணினேன். துளசியை முதல்முறை பார்த்த போது அவளின் துறு துறு நடை, பாவனை நான் நினைத்த அந்த கேரக்டருக்கு அப்படியே பொருத்தமா இருந்தது.

ஜெயமோகனின் வட்டார வழக்கு வசனங்கள் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. எனக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருட நட்பு இருக்கு. கடல் படத்திற்காக அவர் எழுதிய கவிதைகளை எடுத்து ரஹ்மான் இசையில் பாடலாக்கியுள்ளோம். வைரமுத்து மகன் மதன் கார்க்கியும் கடல் படத்தில் அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். கடல் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு படமாக இருக்கும் என்றார்.

Tags »
Kadal, Maniratnam, கடல், மணிரத்னம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

sundar - chennai,இந்தியா
2013-02-04 20:27:53 Report Abuse
 sundar படம் வேஸ்ட். ஒரு கதையும் இல்ல. வேஸ்ட் ஒப் டைம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Saravanan - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
2013-01-19 21:07:57 Report Abuse
Saravanan Ravanan padam madiri irukuma
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தினேஷ் kumar - chennai,இந்தியா
2013-01-19 19:59:43 Report Abuse
 தினேஷ் kumar போடா புண்ணாக்கு .. அடுத்த பலாப்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மகேசு - Vellore ,இந்தியா
2013-01-19 17:19:45 Report Abuse
 மகேசு படம் Flop தான் ....மணி பேசாம TV சீரியல் எடுங்க....அதகூட பார்க்கிர மாதிரி எடுங்க.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in