Advertisement

சிறப்புச்செய்திகள்

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த சிம்ரன்! | ஏ.ஆர்.முருகதாஸின் கத்தி சுட்ட பழமா? சுடாத பழமா? விரைவில் தெரிந்து விடும்! | ஜெயராம் மகன் அறிமுகமாகும் படத்தை கமல் தொடங்கி வைக்கிறார்! | ரஜினி அரசியலுககு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்! | மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் விஜயசாந்தி! | த்ரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா...! | பாலா என்னை பட்டை தீட்டினார்! - வேதிகா பளிச் பேட்டி | ஐ படத்திற்காக விமானத்தில் பறந்தபடியே பாடல் எழுதிய கபிலன்! | இந்திப் படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட ஸ்ருதிக்கு முக்கால் கோடி சம்பளம் | இனி ஹீரோக்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி முடிவு |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் படம் இயக்குகிறார் கஸ்தூரிராஜா

Kasthuri raja to direct film in Malayalam
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, கும்மிபாட்டு போன்ற படங்களில் கிராமத்து செண்டிமெண்டை உருக உருக தந்தவர் கஸ்தூரி ராஜா. அதன்பிறகு துள்ளுவதோ இளமை, ட்ரீம்ஸ், இது காதல் வரும் பருவம் என்று காமத்துபால் படங்களையும் எடுத்தவர். தன் மகன்களான செல்வராகவனை இயக்குனராகவும், தனுஷை நடிகராகவும் ஆக்கினார். தனுஷின் புண்ணியத்தால் சூப்பர் ஸ்டாருக்கு சம்பந்தியாகவும் ஆனார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். கஸ்தூரிராஜாவுக்கும் அப்படித்தான். தமிழில் உதயா நடிக்க ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தார் அது பாதியில் நின்று விட்டது.

சமீப காலமாக தனுஷூக்கு கேரளாவில் நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மம்முட்டி திலீப் நடிக்கும் ஒரு படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். மகனின் இந்த மலையாள எண்ட்ரியை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் கஸ்தூரிராஜா. ஒரு மலையாளப் படம் இயக்க முடிவு செய்தார். படத்தின் பெயர் குளோஸ் பிரண்ட்ஸ். செபினும், பாபு முகுந்தனும் குளோஸ் பிரண்டாக நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. சின்ன வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இருவரின் ஒவ்வொரு வயசிலும் அது எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. படத்திற்கு சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் பூஜை போட்டார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

காமதேவன் - CHENNAI ,இந்தியா
21-ஜன-2013 09:02 Report Abuse
 காமதேவன் போய்யா,போயி அங்கயும் கும்மி அடி. ஆத்துல போற தண்ணிய அள்ளிக்குடிச்ச என்ன நக்கி குடிச்சா என்ன.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மகேசு - Vellore ,இந்தியா
19-ஜன-2013 17:42 Report Abuse
 மகேசு படம் பிச்சிக்கிட்டு( தியேட்டர விட்டு ) ஓடும் ......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தங்கதுரை - bangalore,இந்தியா
19-ஜன-2013 14:17 Report Abuse
 தங்கதுரை ஏற்கனவே மலையாள படம் மாதிரிதான் தமிழ் படமே ? இதுல இது வேறயா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in