Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் கம் பாடகர் ஆனார் சூப்பர் சிங்கர் ஆஜீத்...!

19 ஜன, 2013 - 10:34 IST
எழுத்தின் அளவு:

தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார்.

ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் "திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை..." என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.

முதலில் பாடுவதற்கு மட்டுமே ஆஜீத்தை அழைத்தார்களாம். பின்னர் அந்த பாட்டுக்கு ஒரு சின்னப்பையன் கேரக்டர் தேவைப்பட்டதால் ஆஜீத்‌தையே நடிக்க வைத்துவிட்டார்கள். ஒரே படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமாகி இருப்பது ஆஜீத் குடும்பத்தாரை ரொம்பவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

பாலா - kerala,இந்தியா
20 ஜன, 2013 - 12:37 Report Abuse
 பாலா தெய்வம் தந்த குரல் உனக்கு நன்றாய் வர வாழ்த்துக்கள்....
Rate this:
சுலு - madurai,இந்தியா
20 ஜன, 2013 - 09:58 Report Abuse
 சுலு முறைப்படி சங்கீதம் கற்று மிகவும் அழகாக பாடின அந்த இரண்டு பொண்ணுகளும் தோற்றது. காட்டு கத்து கத்தின இந்த பொடியன் சூப்பர் சிங்கர்! கொடும சாமி !!!!!
Rate this:
leeno - new delhi,இந்தியா
20 ஜன, 2013 - 08:40 Report Abuse
 leeno ஐ லவ் அஜீத் நீ தாண்ட சூப்பர் சிங்கர்
Rate this:
கௌசல்யா - Denhelder,நெதர்லாந்து
20 ஜன, 2013 - 00:22 Report Abuse
 கௌசல்யா மகனே அஜீத் ,நீ சினிமாவில நடித்துகிட்டு ,பள்ளியையும் மறந்துவிடாதே.படிப்பு மிக முக்கியம்.செல்வத்தைவிட கல்வியே முக்கியம்.வாழ்க.
Rate this:
மகேசு - Vellore,இந்தியா
19 ஜன, 2013 - 17:40 Report Abuse
 மகேசு வாழ்க வளமுடன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in