சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
3 படத்துக்குப்பிறகு தனுஷ் அதிக நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் மரியான். நீர்ப்பறவை, கடல் படங்களைப்போன்று இந்த படமும் கடற்கரையோர மக்கள் சார்ந்த கதையில் உருவாகி வருகிறது. கதைப்படி மீனவனாக நடிக்கும் தனுஷ். இரவு பகல் பாராமல் எந்நேரம் இயக்குனர் படப்பிடிப்பை வைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். உப்புக்காற்றை நீண்ட நேரம் சுவாசிக்க கஷ்டமாக உள்ளது என்று யூனிட்வாசிகள் சொன்னபோதும், அந்த மாதிரி வார்த்தை தனுஷ் வாயிலிருந்து மட்டும் வர மறுக்கிறதாம். அந்த அளவுக்கு ஒரு பரம்பரை மீனவனாகவே மாறிப்போயிருக்கிறாராம்.
மேலும், இப்படத்துக்காக தென்ஆப்பிரிக்காவிலுள்ள கடற்கரை பகுதிகளில் படமாக்கப்பட்டபோது, சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் மணலில் விழுந்து புரண்டெல்லாம் நடித்தாராம் தனுஷ். அதைப்பார்த்து கலங்கிப்போன அப்படத்தின் நாயகியான பூ பார்வதி, எந்தவொரு பிரபல ஹீரோக்களுமே இப்படி நடிக்கத்துணிய மாட்டார்கள். அந்த வகையில் தனுஷ் கிரேட் ஆக்டர் என்பதை நிரூபித்து விட்டார். அவர் போன்ற நடிகர்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது ரொம்ப பெருமையாக உள்ளது என்று தனுஷ் புராணம் பாடிக்கொண்டு திரிகிறார் பார்வதி.