Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஷால்தான் என்னை வெளிச்சம் போட்டு காட்டினார்- த்ரிஷா

Vishal shows my Ability says Trisha
லேசா லேசா படத்தில் அறிமுகமான த்ரிஷா நடிகையாகி 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் நடித்து விட்டார். ஆனால் இன்னும் கதாநாயகியை மையமாகக்கொண்ட கதைகளில் அவர் நடிக்கவில்லை. எல்லா படங்களிலுமே டூயட் பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார். மேலும் வருடங்கள் அதிகமாகி விட்டதால் இனிமேல் தனக்கு வெயிட்டான கதாபாத்திரங்களும் கிடைப்பது அரிது என்றுதான் நினைத்திருந்தார் த்ரிஷா.

ஆனால் அவரும், மற்றவர்களும் எதிர்பார்க்காத வகையில், சமர் படத்தில் த்ரிஷாவை நெகடீவ் ஹீரோயினியாக நடிக்க வைத்தார் விஷால். அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகையை இயக்குனர் பரிந்துரைத்தபோது, த்ரிஷாதான் நடிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார் விஷால். இதுவரை தான் நடிக்காத வேடம் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. அதைப்பார்த்து விட்டு, இப்போதும் சில தெலுங்கு இயக்குனர்களும் நெகடீவ் ஹீரோயினியாக நடிக்க த்ரிஷாவிடம் கேட்கிறார்களாம். இதனால் உற்சாகத்தில் இருக்கும் த்ரிஷா, எனக்குள் இருக்கும் இனனொரு நடிகையை வெளிச்சம் போட்டு காட்டியவர் விஷால்தான். அதனால் அவருக்கு நான் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் இதை கேள்விப்பட்ட விஷால், நன்றி சொல்லி நமது பல ஆண்டு ப்ரண்ட்ஷிப்பை களங்கப்படுத்தாதே த்ரிஷா என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளாராம்.

Tags »
Trisha, Vishal, த்ரிஷா, விஷால்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

sakthi - chennai,இந்தியா
2013-01-19 10:29:41 Report Abuse
 sakthi அபியும் நானும், மன்மதன் அம்பு படம் எல்லாம்..........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in