சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |

இயற்கையிலேயே ஹன்சிகாவுக்கு, சற்று குண்டான உடல்கட்டுதான். ஆரம்பத்தில்,
அவர் ப்ரஷ்ஷாக இருந்ததால், உடல் பருமனை யாரும் பெரிதுபடுத்த வில்லை.
மேலும், தமிழ் சினிமாவில், இதுபோன்ற உடல்வாகு உள்ள நடிகைகளுக்கு தான் மவுசு
என்றும் பலர் அட்வைஸ் செய்ததால், படத்துக்கு படம் ஒரு சுற்று பெருத்துக் கொண்டே
வந்தார் ஹன்சிகா. இப்போதோ ஹீரோக்களுடன் எளிதாக டூயட் பாட முடியாத அளவுக்கு,
குண்டடித்து விட்டார். இதனால், அவருக்கு புதிய படங்கள் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து, ஸ்லிம் நாயகியாகும் முயற்சியில் இறங்கியுள்ள
ஹன்சிகா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.