Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட் - கதைச் சுருக்கம் இதுதான்…

05 ஏப், 2022 - 20:09 IST
எழுத்தின் அளவு:
Beast-story-out

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு பல இடங்களில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அமெரிக்காவிலும் இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள தியேட்டர்களில் வெளியாகும் படங்களைப் பற்றிய தகவல்கள், கதைச் சுருக்கம் ஆகியவற்றை அவர்களது இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த விதத்தில் 'பீஸ்ட்' படத்தின் கதைச்சுருக்கத்தையும் வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே 'பீஸ்ட்' டிரைலரைப் பார்த்தே அதன் கதை என்ன என்று சொல்லிவிடலாம். அது மட்டுமல்ல சில பல ஹாலிவுட் படங்களின் காப்பி, யோகி பாபு நடித்த 'கூர்க்கா' படத்தின் காப்பி என்றெல்லாம் படத்தின் கதை பற்றி கிண்டலடித்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள கதைச்சுருக்கம் கீழே…

“மாநகரத்தின் பிஸியான இடம் ஒன்று சர்வதேச தீவிரவாத குழு ஒன்றால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அவர்களது குழு தலைவனை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமிக்கிறது. அவர்கள் தீவிரவாதக் குழுவுடன் பேச ஆரம்பிக்கிறார்கள். ஹைஜாக் செய்யப்பட்ட அந்த கட்டிடத்திற்குள் தன்னுடன் பணி புரிந்த முன்னாள் ரா ஏஜன்ட் இருப்பதை அரசு நியமித்த குழுவின் தலைவர் கண்டுபிடிக்கிறார். அவரிடம் தீவிரவாதக் குழுவிடமிருந்து பணயக் கைதிகளை விடுவிக்க உதவி கேட்கிறார். தீவிரவாத குழுவை எதிர்த்துப் போராடி பணயக் கைதிகளை மீட்கும் பணியை ஆரம்பிக்கிறார் அந்த முன்னாள் ரா ஏஜன்ட். தீவிரவாதக் குழுவின் தலைவனை அரசாங்கம் விடுவிக்கிறது, அது மட்டுமல்ல தீவிரவாதக் குழுவுக்கு ஆதரவாகவே எல்லாம் நடக்கிறது. ஆனால், ரா ஏஜன்ட் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி தீவிரவாதியையும் கொல்கிறார்”.

'பீஸ்ட்' கதைச்சுருக்கம் 'பெஸ்ட்' ஆ, இல்லை 'வேஸ்ட்' ஆ என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
குஸ்தி போட தயாரான விஷ்ணு விஷால்குஸ்தி போட தயாரான விஷ்ணு விஷால் விஜய் 66 - 6 பால் 6 சிக்ஸ்….  இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி விஜய் 66 - 6 பால் 6 சிக்ஸ்…. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

06 ஏப், 2022 - 17:56 Report Abuse
Unmaiya Sonnen Gurkha Part 2, coming soon..
Rate this:
Suman - madurai,இந்தியா
06 ஏப், 2022 - 08:31 Report Abuse
Suman ஒரு நாள் இது சன் டிவில வரும். அப்ப பாத்துக்கலாம் விடுங்க.
Rate this:
vijay - ,
06 ஏப், 2022 - 11:28Report Abuse
vijayne solra Mari story irundhudta ne best ila nee suttha waste...
Rate this:
mohan - chennai,இந்தியா
06 ஏப், 2022 - 16:44Report Abuse
mohanஇதெல்லாம் ஏற்கனவே நிறைய படங்களில் பத்தாச்சே பழைய மொந்தையில் புதிய கலவை மெர்சல் பத்து படங்களில் காப்பி பேஸ்ட் எத்தனை படங்களில் காப்பியோ இதுக்கு கூர்க 2 பார்க்கலாமே கன்றாவி விஜய் நிலைமை இப்படி ஆச்சே ? ராமசாமி பணம் உஉஉஉஉ...
Rate this:
Anand G - Chennai,இந்தியா
06 ஏப், 2022 - 08:27 Report Abuse
Anand G கதை best ஆ waste ஆனு சொல்ல வேண்டியது இல்லை, படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம், நல்ல கதை எல்லாம் நல்ல படமாக வெற்றி பெறுவதில்லை, இயக்குனர் பல முறை பார்த்த கதையை எப்படி இயக்கி உள்ளார் என்று பார்த்து மதிப்பிடுவோம், நன்றி
Rate this:
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஏப், 2022 - 07:36 Report Abuse
Venkat தமிழக சினிமாவிற்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தீவிரவாதம் அதை சுற்றி ஹீரோ கதைகளை எடுப்பார்கலோ. பாவம் தமிழக மக்கள்
Rate this:
Ram - ottawa,கனடா
06 ஏப், 2022 - 07:16 Report Abuse
Ram இந்த கதைக்கு விஜயகாந்த் சார் தான் சரிப்பட்டு வருவார்
Rate this:
mohan - chennai,இந்தியா
06 ஏப், 2022 - 16:45Report Abuse
mohanஅப்போ விஜய் இந்த கதைக்கு சரிபடமாட்டர் சொல்லுற இந்த படத்தை கதைனு ஒன்னு இருக்கஆ என்ன கோவிந்தா கோவிந்தா...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in