Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருங்கைக்காய் நடிகரின் வாயை அடைத்த லட்டு படக்குழு!

13 ஜன, 2013 - 12:19 IST
எழுத்தின் அளவு:

சந்தானம், சேது, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மூன்று ஹீரோக்களாக நடித்துள்ள படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம் மூன்று பேர் ஒரு பெண்ணை காதலிக்கும் கதையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் முன்பு இயக்கிய இன்று போய் நாளைவா படத்தின் கதை அடிப்படையில் இந்த கதையையும் உருவாக்கியிருக்கிறார்களாம். ஆனால் இதற்கான ஒப்புதலை முறையாக பாக்யராஜிடம் பெறவில்லையாம. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி வரை அடக்கிவாசித்த பாக்யராஜ். தேதி அறிவித்ததும் இதுதான் எதிரிகளை தாக்க சரியான சந்தர்ப்பம் என்று படத்தின் மீது மோசடி புகார் அளித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத லட்டு படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது. இது வேறு மாதிரியான கதை என்றும் வாக்குவாதம் செய்தது. ஆனால், அதற்கு முன்பு இன்றுபோய் நாளை படத்தின் தழுவல்தான் இந்த படம் என்று அப்படக்குழுவினர் சிலர் பேசியதை வீடியோ ஆதாரமாக வைத்து பாக்யராஜ் பேசியதால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. அதனால் வாய்விட்டு வம்பில் மாட்டிக்கொண்டேமே என்று தடுமாறிய லட்டு படக்குழு, அதன்பிறகு முருங்கைக்காய் நடிகரை சமாளிக்க பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அதற்கெல்லாம் மனிதர் அடங்கவில்லை. இறுதியில் சில லட்சங்களை அவர் முன்பு எடுத்து போட, அதுவரை வெறுப்பாக இருந்த முருங்கைக்காய், கரன்சியை கண்ணில் பார்த்ததும் ஹாடான பேச்சை கலகலப்பாக மாற்றி விட்டதோடு, பேச்சுவாக்கில் கட்டுகளையும் கைப்பற்றி விட்டாராம். விளைவு, மேற்படி நடிகர் கம் டைரக்டருக்கு ஒரு திருப்பதி லட்டை கொடுத்து விட்டு, லட்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

மைசூருபாக் - Laddu City ,லாஸ்
15 ஜன, 2013 - 01:28 Report Abuse
 மைசூருபாக் ஏய் ரெண்டு முருங்கக்கா இல்லைன்னா ஒரு லட்டு போதாதா வாயை அடைக்க அதை விட்டு விட்டு என்னமோ நோட்டு கட்டு அப்படின்னு இம்சை பண்ணிக்கிட்டு
Rate this:
ganesh - kumbakonam,இந்தியா
14 ஜன, 2013 - 14:37 Report Abuse
 ganesh இந்த முருங்கை மஞ்சள் துண்டிடம் பணம் வாங்கிகொண்டு 5 வருடம் ஜால்ரா போட்டவன் தான் , இப்ப பணம் என்ற உடன் ஓகே சொல்லி விட்டான் .
Rate this:
MagEsh - aminjikarai  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2013 - 13:10 Report Abuse
MagEsh mega hit super movie......!
Rate this:
natarajan - chennai,இந்தியா
14 ஜன, 2013 - 11:59 Report Abuse
 natarajan பாக்யராஜுக்கெல்லாம் இன்னும் முக்கியத்துவம் கொடுப்பது அக்கிரமம்.
Rate this:
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
14 ஜன, 2013 - 03:22 Report Abuse
ram ivar permission illama chinna veedu katturathu,murungakai sambar vaikkurathu ellame prachanapola
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in