Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2022ன் முதல் பிளாக்பஸ்டர் 'வலிமை', தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

01 மார், 2022 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Valimai-first-block-buster-in-2022

2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் அலை தாக்கத்துடன்தான் ஆரம்பமானது. டிசம்பர் மாதத்திலேயே ஒமிக்ரான் பரவல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டு ஜனவரி மாதத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் இந்நிலை பல மாநிலங்களில் இருக்க பொங்கலுக்கு வெளிவர வேண்டிய பல படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள்.

அவற்றில் அஜித் நடித்த 'வலிமை' படமும் ஒன்று. ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைப்பதாக அறிவித்தார்கள். அதன்பின் பிப்ரவரி மாதத் துவக்கத்திலேயே ஒமிக்ரான் பரவல் சற்றே குறைய ஆரம்பித்தால் புதிய படங்களின் வெளியீடுகளையும் திட்டமிட்டார்கள். அடுத்து 100 சதவீத இருக்கைக்கும் அனுமதி கொடுத்தார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவில் 24 படங்கள் வரை வெளியாகின. அவற்றில் ஒரு படம் கூட வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. விஷால் நடித்து வெளிவந்த 'வீரமே வாகை சூடும்' தோல்வியடைந்தது. விஷ்ணு விஷால் நடித்த 'எப்ஐஆர்' படத்தை வெற்றிப் படம் என சக்சஸ் மீட் வைத்தார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'வலிமை' குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனால், படத்தைப் பார்க்க கடந்த ஞாயிறு வரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்ததாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் 'வலிமை' என பல தியேட்டர்காரர்கள் சொல்கிறார்கள். மூன்று நாட்களில் 100 கோடி வசூலையும் படம் கடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இருப்பினும் நேற்று முதல் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'மாறன்' எமோஜிக்கள் வெளியீடு'மாறன்' எமோஜிக்கள் வெளியீடு உக்ரைன் மக்களுக்காக நிதி உதவி கேட்கிறார் எமி ஜாக்சன் உக்ரைன் மக்களுக்காக நிதி உதவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Dr.P.LOGANATHAN - erode,இந்தியா
03 மார், 2022 - 09:56 Report Abuse
 Dr.P.LOGANATHAN ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. அஜித் உண்மையாகவே மிரட்டியிருக்காரு வாழ்த்துக்கள்
Rate this:
Jolna paiyan - Dallas,யுனைடெட் கிங்டம்
02 மார், 2022 - 05:52 Report Abuse
Jolna paiyan நல்ல கதைக்கரு ஆனால் உட்கார முடியவில்லை. அஜித், விநோத் படம் என்று நம்பிபோய் கழுத்து அறுபட்டு மூன்று மணி நேர வேதனை தான் மிச்சம். இனிமேல் யாரும் கேட்டு ஆப்பு வாங்க வேண்டாம்.
Rate this:
Raja -  ( Posted via: Dinamalar Android App )
01 மார், 2022 - 18:20 Report Abuse
Raja Excellent movie.. good message for youngsters..
Rate this:
sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்
01 மார், 2022 - 18:13 Report Abuse
sankar iyer எல்லோரும் சந்தோசமா இருந்த சரி பொது வா அஜித் படம் பார்க்காத வங்க கூட, படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்ராங்க , மகிழ்ச்சி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in