Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ்! கமல் அறிவிப்பு!!

10 ஜன, 2013 - 09:58 IST
எழுத்தின் அளவு:

ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்தது. கமல்-தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்துள்ளார்.

கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.,இல் வெளியிடும் புதிய தொழில்யுக்தியை கையாண்டுள்ளார்.

தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு : கமலின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். டி.டி.எச்.இல் படம் வெளியான தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், கமல் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். இருந்தும் கமல் தனது டி.டி.எச். கொள்கையில் உறுதியாக இருந்தார். முன்னதாக படத்தை 11ம் தேதியும், டி.டி.எச்.இல் 10ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

சுமூக உடன்பாடு : இந்தசூழலில் கமலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கமல் நேற்று தனது ராஜ்கமல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, விஸ்வரூபம் படத்‌தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும், இதுயாருடைய நிர்ப்பந்தத்தாலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதேசமயம் டி.டி.எச்.இல் வெளியிடும் திட்டத்தை தான் ஒருபோதும் கைவிடப்போவது இல்லை என்று கூறினார். இதனிடையே தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வந்தது.

ஜன.25-ல் ரிலீஸ் : இந்நிலையில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படும் என்றும், டி.டி.எச்., முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

டி.டி.எச். ரிலீஸ் எப்போ...? கமல் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் டி.டி.எச்.இல் எப்போது ரிலீஸ் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

புகக் - chennai,இந்தியா
11 ஜன, 2013 - 15:56 Report Abuse
 புகக் ஒரு படத்த வெச்சிக்கிட்டு நீ படுத்தற பாடு இருக்கே அயோ ராம முடியல
Rate this:
nc santhosh - cbe 26  ( Posted via: Dinamalar Android App )
11 ஜன, 2013 - 10:48 Report Abuse
nc santhosh good
Rate this:
சுகுமார் - namakkal,இந்தியா
11 ஜன, 2013 - 10:30 Report Abuse
 சுகுமார் ஜனவரி 25 படம் ரிலீஸ் நல்ல விசயம்தான். DTH தியேட்டர் 2-லும் ஒரே டைம்ல பண்ணுனா பரவால...... யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல...
Rate this:
எஸ்.பானு - gummudipundi,இந்தியா
11 ஜன, 2013 - 07:39 Report Abuse
 எஸ்.பானு உலகம் அய்யா அவர்களே! படம் போனி ஆகலேன்னா இப்படித்தான் சரணாகதி ஆகணும். இப்பவே சண்டை போட்டது நல்லதா போச்சு. படம் ஒடலேன்னா வாங்கிய பணத்த திருப்பி தர வேண்டாமில்ல. நல்ல மூளக்காரன்யா நீ.
Rate this:
sayttu - london,யுனைடெட் கிங்டம்
10 ஜன, 2013 - 23:17 Report Abuse
 sayttu குட் ட்ரை வெள் டன்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in