Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு! கமல் அறிவிப்பு

09 ஜன, 2013 - 13:29 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி‌ வைத்தார் நடிகர் கமல்ஹாசன். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இதனை அறிவித்தார். மேலும் டி.டி.எச்., இல் படம் வெளியாவது உறுதி என்றும் கூறினார்.

கமல் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் புதிய திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் கொண்டு வந்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது குறித்து தியேட்டர் உரிமையாளர்களும், நடிகர் கமல்ஹாசனும் நேற்று இரவு சந்தித்து பேசினர். இதில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டதாக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தது உங்களுக்கே தெரியும். இது என்னுடைய பொருள், அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது.

இது புது வழி! நாளை பொது வழி : டி.டி.எச். ரிலீஸ் என்பது புதிய வழி. என் சுயநலத்திற்காக நானே எடுத்த வழி கிடையாது. இன்று இது புது வழி. நாளை அனைவரும் பயன்படுத்தும் பொதுவழி. சாட்டிலைட் வந்தபோது இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இப்போது அதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள். அதேபோல் இந்த டி.டி.எச்., சேவையையும் நாளை அனைவரும் வரவேற்பார்கள். இது என்னுடைய படம். எனது படத்தை இப்படி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு :
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.-ல் வெளியாகும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதியை மட்டும் தள்ளி வைத்துள்ளேன். இது யாருடைய நிர்ப்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எனது நண்பர்கள் சிலர் அறிவுரைகள் சொன்னார்கள். அதில் நியாயங்கள் இருந்தது. அதனை ஏற்று விஸ்வரூபம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளேன். தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

டி.டி.எச்., வீடுகளுக்கு மட்டுமே...! டி.டி.எச்-ல் படத்தை ரிலீஸ் செய்யும் போது வீடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மீறி கேபிள் மூலமாகவோ, உணவு விடுதிகளிலோ அல்லது வேறு ஏதாவது பெரிய வளாகங்களிலோ படத்தை ஒளிப்பரப்பு செய்தால் அது சட்ட வி‌ரோதமானது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிலீஸ் தேதியை நான் தான் முடிவு செய்வேன் : விஸ்வரூபம் படம்  எந்தவொரு சமூகத்தையும் தாக்கும் படமல்ல. பலபேர் இந்த படம் வெளியாகும் தேதியை அவர்களாகவே தெரிவித்து வருகிறார்கள். அது சரியல்ல. படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்து அறிவிப்பேன்.

இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Ashok kumar - Dindigul  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன, 2013 - 17:58 Report Abuse
Ashok kumar KAMAL sir Than tamil padathin Kadavul, avaruke entha nelamaya.. entru thamil padam ulaga alavil pesa paduvatharkum eni pesuvatharkum Kamal Enkira Nadikane karanam. avarin Viswaroopam Nam kandipai (kidaika) parka vendum. avarin entha puthu muyarchiai anaivarum varaverpom. Ulagai Rasipom. vaalga baratham valarga kamalin sevai. Thank thinamalar
Rate this:
Zahoor - Chennai,இந்தியா
10 ஜன, 2013 - 12:49 Report Abuse
 Zahoor No body have rights to say anything about kama hassan ji, the film his own property he have complete rights how to sell his own product,and DTH technolagy tomorrow's vision, I agree wth kamal ji, Zahoor (Chennai)
Rate this:
மொக்கை மோகன் - Chennai,இந்தியா
10 ஜன, 2013 - 09:16 Report Abuse
 மொக்கை மோகன் தமர் நன்றாக கேலி செய்கிறார் ... நல்ல ஹுமௌர் சென்சே தமர்..
Rate this:
தமிழரசன் - Bangalore,இந்தியா
10 ஜன, 2013 - 08:55 Report Abuse
 தமிழரசன் 1000 ருபாய் கொடுதூது இந்த படாத பாக்கணுமா. போங்கப்பா வேலைய பாருங்க . கமல் 300 கோடி ல டேக்ஸ் கட்ட சொல்லுங்க பாக்கலாம். ஒரு பைசா கொடுக்க மாட்டார். . "இப்படி இருந்தா இந்தியா எப்படி வல்லரசு ஆகும் , டள்ளராசா தான் ஆகும் "
Rate this:
gopi - erode,இந்தியா
10 ஜன, 2013 - 07:52 Report Abuse
 gopi Tamar comment is superbbb!!!
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in