Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் ரிலீஸ் தள்ளிவைப்பு! கமல் அறிவிப்பு

09 ஜன,2013 - 13:29 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி‌ வைத்தார் நடிகர் கமல்ஹாசன். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இதனை அறிவித்தார். மேலும் டி.டி.எச்., இல் படம் வெளியாவது உறுதி என்றும் கூறினார்.

கமல் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் புதிய திட்டத்தை நடிகர் கமல்ஹாசன் கொண்டு வந்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது குறித்து தியேட்டர் உரிமையாளர்களும், நடிகர் கமல்ஹாசனும் நேற்று இரவு சந்தித்து பேசினர். இதில் ஒரு சுமூக முடிவு ஏற்பட்டதாக தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொது செயலர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தது உங்களுக்கே தெரியும். இது என்னுடைய பொருள், அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது.

இது புது வழி! நாளை பொது வழி : டி.டி.எச். ரிலீஸ் என்பது புதிய வழி. என் சுயநலத்திற்காக நானே எடுத்த வழி கிடையாது. இன்று இது புது வழி. நாளை அனைவரும் பயன்படுத்தும் பொதுவழி. சாட்டிலைட் வந்தபோது இதே மாதிரி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இப்போது அதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள். அதேபோல் இந்த டி.டி.எச்., சேவையையும் நாளை அனைவரும் வரவேற்பார்கள். இது என்னுடைய படம். எனது படத்தை இப்படி வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு :
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.-ல் வெளியாகும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதியை மட்டும் தள்ளி வைத்துள்ளேன். இது யாருடைய நிர்ப்பந்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எனது நண்பர்கள் சிலர் அறிவுரைகள் சொன்னார்கள். அதில் நியாயங்கள் இருந்தது. அதனை ஏற்று விஸ்வரூபம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளேன். தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் ரிலீஸ் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

டி.டி.எச்., வீடுகளுக்கு மட்டுமே...! டி.டி.எச்-ல் படத்தை ரிலீஸ் செய்யும் போது வீடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மீறி கேபிள் மூலமாகவோ, உணவு விடுதிகளிலோ அல்லது வேறு ஏதாவது பெரிய வளாகங்களிலோ படத்தை ஒளிப்பரப்பு செய்தால் அது சட்ட வி‌ரோதமானது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிலீஸ் தேதியை நான் தான் முடிவு செய்வேன் : விஸ்வரூபம் படம்  எந்தவொரு சமூகத்தையும் தாக்கும் படமல்ல. பலபேர் இந்த படம் வெளியாகும் தேதியை அவர்களாகவே தெரிவித்து வருகிறார்கள். அது சரியல்ல. படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்து அறிவிப்பேன்.

இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement
மாபியா ரோலில் ஜெயம் ரவி!!மாபியா ரோலில் ஜெயம் ரவி!! பாலா படத்தில் நடிக்க விக்ரம்- விஷாலுக்கிடையே கடும் போட்டி! பாலா படத்தில் நடிக்க விக்ரம்- ...

வாசகர் கருத்து

Ashok kumar - Dindigul  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 17:58
Ashok kumar KAMAL sir Than tamil padathin Kadavul, avaruke entha nelamaya.. entru thamil padam ulaga alavil pesa paduvatharkum eni pesuvatharkum Kamal Enkira Nadikane karanam. avarin Viswaroopam Nam kandipai (kidaika) parka vendum. avarin entha puthu muyarchiai anaivarum varaverpom. Ulagai Rasipom. vaalga baratham valarga kamalin sevai. Thank thinamalar
Zahoor - Chennai,இந்தியா
10 ஜன,2013 - 12:49
 Zahoor No body have rights to say anything about kama hassan ji, the film his own property he have complete rights how to sell his own product,and DTH technolagy tomorrow's vision, I agree wth kamal ji, Zahoor (Chennai)
மொக்கை மோகன் - Chennai,இந்தியா
10 ஜன,2013 - 09:16
 மொக்கை மோகன் தமர் நன்றாக கேலி செய்கிறார் ... நல்ல ஹுமௌர் சென்சே தமர்..
தமிழரசன் - Bangalore,இந்தியா
10 ஜன,2013 - 08:55
 தமிழரசன் 1000 ருபாய் கொடுதூது இந்த படாத பாக்கணுமா. போங்கப்பா வேலைய பாருங்க . கமல் 300 கோடி ல டேக்ஸ் கட்ட சொல்லுங்க பாக்கலாம். ஒரு பைசா கொடுக்க மாட்டார். . "இப்படி இருந்தா இந்தியா எப்படி வல்லரசு ஆகும் , டள்ளராசா தான் ஆகும் "
gopi - erode,இந்தியா
10 ஜன,2013 - 07:52
 gopi Tamar comment is superbbb!!!
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
10 ஜன,2013 - 05:01
 எஸ்.பானு உலகம் அய்யா அவர்களே! உன்னோட படத்த எப்படி வியாபாரம் செய்யணும்னு சொல்ல யாருக்கும் அருகதை இல்லை ஒத்துக்கறேன். அப்புறம் இன்னாத்துக்கு ரிலீஸ் தேதிய தள்ளிகினே போறீங்க? தியேட்டர் இல்லைனா படத்துல போட்ட பைசா அம்பேல்னு டூ பாத்ரூம் வர மாதிரி இருக்கா அய்யா? பேச்சை கொற மேன். சுமூகமா பேசி எப்படி படத்தை ரிலீஸ் பண்ணி ரசிகர்களை குசிப்படுத்த பாருங்க சார். குட் லக்.
kv - pr  ( Posted via: Dinamalar Windows App )
10 ஜன,2013 - 02:26
kv புலி வருது
வன்னியரூபம் - Vaaniyambaadi ,வனுட்டா
10 ஜன,2013 - 02:21
 வன்னியரூபம் ஏய் நீ இன்னும் ரீலை அவுத்து விடலை ஆனா இங்க வரும் பத்தாம் தேதி வெளியிடுறோம் அப்படின்னு விளம்பர ரீல் விடுரானுகோ இதை கொஞ்சம் இன்னான்னு கேக்கபுடாதா கமாலு....
விஜய் - Washington DC,யூ.எஸ்.ஏ
10 ஜன,2013 - 01:51
 விஜய் Everybody have their own problems
Rss - Mumbai,இந்தியா
10 ஜன,2013 - 01:45
Rss யார் தீவிரவாதி என்று மீண்டும் தெளிவு படுத்தும் படம்
karthik - chennai  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன,2013 - 00:21
karthik எனது படம் எனக்குதான் வெளியிட உரிமை எனக்குதான் ரிலீசு தேதி் சொல்ல முடியும்னு சொல்றீங்க கடைசில உங்க படத்தை நீங்க மட்டும்தான் பாக்கற மாதி்ரி ஆகிட போதுங்கன்னா!?
தமர் - Qatar,கத்தார்
09 ஜன,2013 - 19:21
 தமர் ஹலோ, யாரங்கே, இந்த ஆளு ரிலிஷ் பண்ண மாட்டார் போல இருக்கு, நாம எடுத்து வச்சிருக்கற விஷ்வரூபம் திருட்டு சிடிய எடுத்துட்டு வா நாமளாவது ரிலிஷ் பண்ணலாம்
முத்து - TIRUPPUR ,இந்தியா
09 ஜன,2013 - 19:12
 முத்து கமல் சார் 1000 ரூபாய் என்பது மிக மிக அதிகம். 500 ரூபாய் என அறிவியுங்கள். அதிக பேர் புக் பண்ண சந்தர்ப்பம் உண்டு...
Anif - Kallakurichi,tamilnadu,இந்தியா
09 ஜன,2013 - 18:33
 Anif Kamal i like this
Santha kumar - Perth  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 18:05
Santha kumar போங்கப்பா
dharan - chennai  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 17:27
dharan kamal ji ... don't try to make everyone look like fools. each and every Hindi film is released in dth after 4 days of it's release in theater. it's obvious that you are trying to get a bulk profit. you will get your reward if the film is good.
sivaraman - Karur  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 17:21
sivaraman கமலின் சிந்தனை விஞ்ஞான ரீதி்யானது வியாபார சுயநல நோக்கமில்லாதது காலம் இதை உறுதி்யாக்கும்
பக்தா - Oman  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 17:07
பக்தா ஒங்க பிரச்சனைக்கு நடுவுல என்னோட 1200 போச்சடா!!!!!! நீங்க வரும் ஆனா வராதுனு சொல்லும்போதே தெரியும்.
nasal - London  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன,2013 - 15:04
nasal well said kamal கமல் பேசுவதி்ல் நியாயம் இருக்கிறது
கார்த்திக் - Bangalore,இந்தியா
09 ஜன,2013 - 14:47
 கார்த்திக் கமல் மறுபடியும் DTH ல் veliyiduven என்பதில் உறுதியாக இருக்கிறார் அடுத்து அபிராமி ராமநாதன் அவர்களிடம் இருந்து ஒரு அறிக்கை வரும். DTH ல் வெளியிடும் எந்த படத்திற்கும் எங்கள் ஒத்துழைப்பு கிடையாது. இப்படியே ரெண்டு பேரும் மாறி மாறி அறிக்கை விட்டுட்டே இருங்கள். இதில் எங்கே சமரசம் ஏற்பட்டது??
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express
  Tamil New Film Mapla Singam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in