படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா? | "கரு - தியா" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா? | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு | கீர்த்தி சுரேஷ்க்கு அப்பாவாகும் லிவிங்ஸ்டன் | அனு இம்மானுவேலுவின் நம்பிக்கை | தூக்கமில்லாமல் தவித்த பிந்து மாதவி |
அமீர் தனது கதை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஆக்ஷ்ன் களத்திற்கு அடி எடுத்து வைத்துள்ள படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ள இப்படத்தில் ரவி கிட்டத்தட்ட 5 ரோலில் நடித்து இருக்கிறார். பல கெட்-அப் மாற்றங்கள் செய்து ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஆதிபகவன் படம் தொடங்கியபோது அமீர் அண்ணன் ஸ்டைலுக்கும் நமக்கும் ஒத்து போகல. அமீரிடம், அண்ணா எனக்கு சரியா வருமா என்று பலமுறை பயந்து கேட்டு இருக்கேன். அமீர் அண்ணன் தான், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குல, தைரியமா நடி என்று எனக்கு சப்போர்ட் பண்ணி நடிக்க வைத்தார். ஆதிபகவன் படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கும். மாபியா கும்பிலின் கதையை அதிரடியா எடுத்திருக்கிறார். இப்படத்தில் என்னுடைய ரோலை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். மொத்தத்தில் ஆதிபகவன் படம் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்றார்.