யானை காதில் எறும்பு நுழைந்தால் என்னவாகும் : கமல் | மீண்டும் ஹீரோயினாக ஷாமிலி | 'வர்மா' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம் | செய்தி சேனல்களுக்குத் தடை? - தெலுங்குத் திரையுலகம் அதிரடி | சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! |
கன்னடம், தெலுங்கு பட ரசிகர்களுக்கு, சஞ்சனாவை தெரியாமல் இருக்காது. இத்தனைக்கும், இவர் அறிமுகமானதே, "காதல் செய்வீர் என்ற தமிழ் படத்தில் தான். இதற்கு பின், பெங்களூரு, ஐதராபாத் பக்கம் போய்விட்டார். மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில், பிரபல கிரிக்கெட் வீரர், விராத் கோஹ்லியுடன், இவர் சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணிக்காக, கோஹ்லி விளையாட வந்தபோது, அவருக்கும், சஞ்சனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும், பல இடங்களில் ஜோடி போட்டு சுற்றினாலும், காதல் இல்லை என்று, இருவருமே திட்டவட்டமாக மறுத்தனர்.
இதுகுறித்து சஞ்சனா கூறுகையில், "விராத் கோஹ்லியுடன், பெங்களூரில் பல இடங்களில் சுற்றியது உண்மை தான். அதற்காக, நாங்கள் காதலிப்பதாக அர்த்தம் இல்லை. நாங்கள் இருவரும், நண்பர்கள்; அவ்வளவு தான். எங்களுக்கு இடையே, காதலும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை என்கிறார், சஞ்சனா.