சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
"டுவிலைட், டுவிலைட் சாகா ஆகிய வெற்றிப் படங்களில் ரத்த காட்டேரியாக நடித்து பிரபலமானவர் கிறிஸ்டின் ஸ்டூவர்ட். இவரும், நடிகர் ராபர்ட் பட்டின்சனும், நெருக்கமாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இப்போது, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். பிரிந்தவர் கூடினால், கேட்கவும் வேண்டுமா? அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என, இந்த காதல் பறவைகள் உல்லாசமாக சுற்றித் திரிகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு ஒரு மனக்குறை. நியூயார்க்கை விட, லண்டனில் வசிப்பது தான், இருவருக்குமே பிடித்திருக்கிறதாம். இதனால், லண்டனின் ஒதுக்குப்புறமான இடத்தில், அழகான, அதே நேரத்தில், பிரமாண்டமான பங்களாவை தேடி வருகின்றனர்.
கிறிஸ்டின் ஸ்டூவர்ட் கூறுகையில், "லண்டனில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது. தற்போது நடிக்கும் படங்களை முடித்துவிட்டு, ராபர்ட் பட்டின்சனுடன், லண்டனில் நேரத்தை செலவிடப் போகிறேன். அதற்கு முன், நல்ல வீடாக விலைக்கு வாங்க வேண்டும் என்கிறார்.