‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் இசை படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியுள்ளார். குஷி, வாலி, நியூ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இடையில் சிறிதுகாலம் நடிகராகவும் வலம் வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும், கூடுதலாக அப்படத்தின் இசையமைப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார். இப்படத்தில் சூர்யா ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இசை படத்தின் கதை, இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான மோதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்று சொல்லப்படும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இசை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த பிரகாஷ்ராஜ், திடீரென விலகியுள்ளார். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, படத்தில் சில காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். சமீபகாலமாக இளையராஜாவுடன் மிக நெருக்கமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் இயக்கிய முதல்படமான தோனியில் இளையராஜா தான் இசையமைத்தார். அதேப்போல் அவர் இயக்க இருக்கும் உன் சமையல் அறையில் படத்திலும் இளையராஜா தான் இசையமைக்க உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இசை படத்தில் நடித்தால் அவரை அவமதிப்பது போன்று இருக்கும் என்று கருதி இசை படத்தில் இருந்து ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.