Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியது ஏன்...?

08 ஜன, 2013 - 16:45 IST
எழுத்தின் அளவு:

எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் இசை படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகியுள்ளார். குஷி, வாலி, நியூ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இடையில் சிறிதுகாலம் நடிகராகவும் வலம் வந்தார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இசை என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும், கூடுதலாக அப்படத்தின் இசையமைப்பாளராகவும் அவதரித்து இருக்கிறார். இப்படத்தில் சூர்யா ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இசை படத்தின் கதை, இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையேயான மோதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்று சொல்லப்படும் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இசை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த பிரகாஷ்ராஜ், திடீரென விலகியுள்ளார். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, படத்தில் சில காட்சிகள் இளையராஜாவை அவமதிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். சமீபகாலமாக இளையராஜாவுடன் மிக நெருக்கமாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் இயக்கிய முதல்படமான தோனியில் இளையராஜா தான் இசையமைத்தார். அதேப்போல் அவர் இயக்க இருக்கும் உன் சமையல் அறையில் படத்திலும் இளையராஜா தான் இசையமைக்க உள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இசை படத்தில் நடித்தால் அவரை அவமதிப்பது போன்று இருக்கும் என்று கருதி இசை படத்தில் இருந்து ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

16 ஜன, 2013 - 10:23 Report Abuse
 மல்லிப்பூ மாதங்கி பிரகாஷ் உங்கள் முடிவு சரிதான் ஆனால், காரணம்தான் சரி இல்லை.
Rate this:
arokiaraj - pondicherry  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன, 2013 - 07:08 Report Abuse
arokiaraj great man,great thinging
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
09 ஜன, 2013 - 14:52 Report Abuse
 பயில்வான் இந்த சூர்யா திருந்த மாட்டான் .......... காமம் இல்லை கலகம் ...
Rate this:
LAX - TRICHY,இந்தியா
09 ஜன, 2013 - 13:51 Report Abuse
 LAX பார்ரா.... அவ்வளோ நல்லவனா நீ? அப்போ ஒவ்வொரு படத்திலும் யாரையாவது இழிவுபடுத்தி கொலை செய்யும் வில்லன் ரோலையும் தவிர்த்துவிடுவதுதானே? நாய் வித்த காசு குலைக்குமா என்ன? போய்யா போ.. ஓவரா சீன போடாத.
Rate this:
முத்துக்குமார் - SRIVI,இந்தியா
09 ஜன, 2013 - 08:23 Report Abuse
 முத்துக்குமார் சிறந்த வில்லன்னு அவாடு வாங்குனேங்கள் இப்படி நல்லவன மாரிடேங்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in