‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டில்லி மாணவி பலாத்தாரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி எடுத்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்முறைக்கு எதிரான குரல் நாடுமுழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சம்பவத்தை இப்போது "பிரீடம்" என்ற பெயரில் சினிமாவாக தயாரித்து வருகிறார்கள். ஒயிட் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறார் டான் கவுதம். இவர் ஏற்கனவே "ஆர்டிஎக்ஸ்" என்ற பெயரில் மும்பை தாக்குதல் சம்பவத்தை படமாக இயக்கியவர்.
பாதிக்கப்பட்ட மாணவியாக டில்லி மாணவி ரேவதி என்பவர் நடித்து வருகிறார். பாகிஸ்தான் இசை அமைப்பாளர் குலாம்நபி இசை அமைக்கிறார். அமிதாப்பச்சன் டெல்லி மாணவி பற்றி எழுதிய கவிதை பாடலாக இடம் பெறுகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. வருகிற 26ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.