Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் படத்தை தடை செய்யுங்கள்: பாக்யராஜ் போலீசில் புகார்

07 ஜன,2013 - 11:00 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சந்தானம், இயக்குனர் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரிக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கே.பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பாக்யராஜ் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

1981ம் வருடம் என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் நடித்து இயக்கிய படம் "இன்று போய் நாளை வா". மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணை காதலிக்க போட்டியிடும் கதை அம்சம் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நெகட்டிவ் உரிமை, திரையீடு உரிமையும் வேறு சிலரிடம் இருந்தாலும் இதன் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. அதை நான் தமிழில் ரீமேக் செய்ய யாருக்கும் விற்கவில்லை. ஆனால் 99 வருட திரையீடு உரிமை பெற்றுள்ள ஓ.கே.பிலிம்ஸ் பி.வி.மணி கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறி தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமிக்கு அதனை விற்றுள்ளார். இதனை புஷ்பா கந்தசாமி என்னிடம் சொன்னபோது நான் இந்தக் கதையை என் மகனை வைத்து மீண்டும் தயாரிக்கப்போகிறேன். அதனால் கதை உரிமையாக யாருக்கும் தர மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் கதை உரிமை என்னிடம் இருப்பது தெரிந்தும் ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கி அதனை ராம.நாராயணனுக்கு விற்றுள்ளார். ராமநாராயணன் தற்போது எனது கதையை நடிகர் சந்தானத்தை வைத்து "கன்னா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை எடுத்து வருகிறார்.

கதை உரிமை என்னிடம் உள்ளது தெரிந்தும், ராமநாயராணன், புஷ்பாகந்தசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து எனது கதையை படம் எடுத்து வருகிறார்கள். கன்னா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை. இன்று போய் நாளை வா கதைதான் என்று படத்தின் ஹீரோ சந்தானமும், இன்னொரு  நடிகரும் பேட்டியில் கூறி உள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கதை என்னுடையது இல்லை என்றால் படத்தை போட்டுக் காட்ட சொன்னேன். அதையும் செய்யாமல் அவசர அவசரமாக திரையிட முயற்சித்து வருகிறார்கள். என் மகனின் எதிர்காலத்திற்காக நான் வைத்திருந்த கதையை இவர்கள் படம் எடுத்துவிட்டதால் எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடங்க உள்ளேன். எனவே போலி ஆவணங்கள் மூலம் எனது கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தை நிறுத்தி வைத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement
கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும்! உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி பேச்சு!கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும்! ... விஸ்வரூபம் பிரச்சினை- கமலுக்கு கைகொடுப்பாரா ரஜினி? விஸ்வரூபம் பிரச்சினை- கமலுக்கு ...

வாசகர் கருத்து

raju - covai,இந்தியா
19 ஜன,2013 - 16:55
 raju சந்தானம் , பாக்யராஜ் இரண்டுபேருமே தமிழ் சினிமா வை கெடுத்து விடுவார்கள். பாக்யராஜ் கே.பி. சுந்தரம்பாள் பாடலை வல்கராக ஆக்கியவர்.
POONKATHIR - PONDICHERRY,இந்தியா
10 ஜன,2013 - 16:34
 POONKATHIR கரப்பான் பூச்சிக்கு பயப்படற கோழக்கெல்லாம் பயில்வான்னு பேராம், மயில்வாகனம்!
பயில்வான்மொக்கை - Thubaai Kirrukku Theru ,டொமினிக்கா
08 ஜன,2013 - 21:32
 பயில்வான்மொக்கை சன் தானம் எங்கையும் போகலைடா
மொக்கையன் - chennai,இந்தியா
08 ஜன,2013 - 16:37
 மொக்கையன் படத்துல பவர் ஸ்டாரு ... அதனால அடிக்காது போரு .. விளம்பரத்த கொஞ்சம் பாரு ... சந்தானம் எங்கேயோ போய்ட்டாரு ... டண்டனக்க டனுக்குனக்க ...
ராஜ் - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஜன,2013 - 13:27
 ராஜ் தமிழக மக்கள் .................நாங்க என்ன பாவம் செய்தோம் .வாரிசு தொல்லை தாங்க முடியல ...............இதை முதல்ல நிறுத்துங்க...............புதுசா வர்றவங்களுக்கு சான்சு கொடுங்க ............? வாரிசுகளை வைத்து தொடர் ரீமேக் படம் யடுக்காதிங்க .இதக்கு உதாரணம் விஜய் ......? 51 படம் நடித்ததில் 49 ......படம் ரீமேக் .தயவு செய்து புதுசா எடுங்க ............இல்ல புதுசா வர்றவங்களுக்கு சான்சு கொடுங்க .
raja - vellore,இந்தியா
08 ஜன,2013 - 11:03
 raja அப்போ உங்க மகனோட எதிர் காலம் வெறும் 2 கோடி மட்டும் தான்ன மிஸ்டர் பாக்யராஜ் சார்
சாந்தனு - Chennai,இந்தியா
08 ஜன,2013 - 04:11
 சாந்தனு தன் பெற்றோர் இட்ட பெயர் எழுத தயங்கும் ஆசாமிக்கு பெயர் பயில்வானா ?
SUBBU - SALEM,இந்தியா
07 ஜன,2013 - 19:38
 SUBBU சண்ட போட்டுகதேங்க ஏட்டையா,விடுங்க பாக்யராஜ் சார்......
மொக்கையன் - chennai,இந்தியா
07 ஜன,2013 - 19:14
 மொக்கையன் பாக்யராஜ் என் கதை என்கிறார் ... உதவி இயக்குனர் என் கதை தற்கொலை பண்ணிக்குவேன் என்கிறார் .. யப்பா யார் கிட்ட சுட்ட லட்டுப்பா இது ... பயில்வான் கருத்து உண்மை .. சாந்தனு கையால சாவறத விட சந்தானம் கையால வாழலாம் - நான் கதைய சொன்னேன் ...
பயில்வான் - mdu,இந்தியா
07 ஜன,2013 - 15:26
 பயில்வான் சாந்தனு ஒரு மோசமான நடிகன் , அவனை வச்சு படம் எடுக்குறதுக்கு பதிலா பாக்கியராசு அந்த ஸ்க்ரிப்ட தீ வச்சு கொளுத்தலாம்
அஜித்குமார் .s - vazhapady ,இந்தியா
07 ஜன,2013 - 14:49
 அஜித்குமார் .s பக்யராஜவிட சந்தானத்துக்கு கதை சூப்பரா இருக்கும் .......
ravi - chennai,இந்தியா
07 ஜன,2013 - 12:55
 ravi அப்ப இந்த லட்டு தின்ன எல்லாருக்கும் ஆசையா இருக்கும் போல இருக்கு .....
komaru - chennai,இந்தியா
07 ஜன,2013 - 12:30
 komaru பாக்யராஜ் இதற்கு சந்தோசம் படவேண்டும். சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வர்தற்கு சமம், அவர் மகனை வைத்து படம் எடுப்பது.
Asic - chennai,இந்தியா
07 ஜன,2013 - 12:23
 Asic ஒருத்தன் வளர்ந்து வந்த யாருக்குமே பிடிகாதே,............
Ramsuganya - Sirahikkottai,இந்தியா
07 ஜன,2013 - 11:54
 Ramsuganya பாக்யராஜின் கதைக்கு எவ்வளவு மதிப்பு
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in