Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியாக தனுஷ்; கமலாக சிம்பு! ஒரு கலக்கல் ரீமேக் சாத்தியமா...?!

06 ஜன, 2013 - 16:27 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக ரீ-மேக் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா ஆகியோரது நடிப்பில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் "இளமை ஊஞ்சலாடுகிறது" இப்படம் இப்போது மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நடிக்க நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்புவின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் ரஜினி கேரக்டரில் தனுஷூம், கமல் கேரக்டரில் சிம்புவையும், ஸ்ரீபிரியா கேரக்டரில் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க எண்ணி இருக்கிறார்கள். இதுதொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் என்னதான் தனுஷ் - சிம்பு இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் தொழில் ரீதியாக அவர்களுக்கு இடையேயான போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி பஞ்ச் டயலாக்குகளை அடுக்கி மறைமுகமாக தாக்கி வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனுஷை அழைத்து இருந்தார் சிம்பு. இதனால் இவர்களுக்கான பகை மறந்துவிட்டது என்றும், இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

vijay - bangalore,இந்தியா
08 ஜன, 2013 - 18:30 Report Abuse
 vijay ivanugala எலாம் ஏத்தி விட்டு பெரிய ஆளுகலா ஆக்க கூடாது யா. . .
Rate this:
ஆரூரன்.ர - pondicherry,இந்தியா
07 ஜன, 2013 - 22:59 Report Abuse
 ஆரூரன்.ர ரஜினியாக ரஜினியும் கமலாக கமலும் நடித்து கே எஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்தால் படம் ஹிட்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
07 ஜன, 2013 - 20:09 Report Abuse
 பயில்வான் வெளங்கும்
Rate this:
சிவசங்கரி - attur,இந்தியா
07 ஜன, 2013 - 11:07 Report Abuse
 சிவசங்கரி i like Dhanush but simbu vendham...
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
07 ஜன, 2013 - 10:45 Report Abuse
 அசோக் குமார் ஸ்ரீப்ரியா கேரக்டரில் ரஜினி மகள் ஐஸ்வர்யா நடிப்பதே சரியாக இருக்கும்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in