Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு ஆதரவாக தியேட்டர் உரிமையாளர்கள்!

05 ஜன, 2013 - 17:26 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியேட்டர் உரிமையாளர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தை அவரே நடித்து, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது ஜன 10ம் தேதி இரவில் டி.டி.எச்-ல் இப்படத்தை ஒளிப்பரப்பு செய்கிறார் கமல். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி ஏர்டெல், வீடியோகான் உள்ளிட்ட டி.டி.எச். நிறுவனங்கள் படத்தை ஒளிப்பரப்பு செய்ய உள்ளனர். கமலின் இந்த முடிவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். டி.டி.எச்-ல் படத்தை வெளியிட்டால் அவர்களது படத்தை திரையிட மாட்டோம் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தசூழலில், கோவையில் த‌ியேட்டர் உரிமையாளர்கள் கமலின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், விஸ்வரூபம் படத்தையும் திரையிட சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னையிலும் சில தியேட்டர் உரிமையாளர்கள் விஸ்வரூபம் படத்தை திரையிட சம்மதம் தெரிவித்து, அதற்கான அறிவிப்பு பலகைகளையும் ஒட்டியுள்ளனர். திருச்சியிலும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கமலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.

அதேசமயம் சங்கத்தின் முடிவை மீறி யாராவது விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு அளித்தால், அவர்களுக்கு எங்களால் எந்த ஒத்துழைப்பும் தரமுடியாது என்று தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்படும் சூழ்நி‌லை உருவாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

சிவா.ம - gummidipoondi ,இந்தியா
31 ஜன, 2013 - 12:49 Report Abuse
 சிவா.ம கமல் ஒரு அற்புதமா உலகி முதல் தரமான நடிகன். அவர் மனதை புண்படுத்துவோர் யாராக இருந்தாலும் நன்றாகவே இருக்க மாட்டார்கள் . அவர் திடீர் பணக்காரன் அல்ல சிறு வயது முதலே நடித்து சேர்த்த பணம் முழுவதுமே இந்த படத்தில் போட்டு எடுத்துள்ளார் அதை புரிந்துகொள்ளத ஜென்மங்கள் உயிருடன் இருப்பதை விட ..................???????
Rate this:
ஸ்ரீதர் - Chennai,இந்தியா
09 ஜன, 2013 - 18:23 Report Abuse
 ஸ்ரீதர் தயாரிப்பாளர்கள் செலவு செய்து படம் எடுக்க , தியேட்டர் உரிமையாளர்கள் திரை இட நடுவே விநியோகஸ்தர்கள் இதை சூதாட்டமாக மாற்றுவது ஏன் ? பிரம்மாண்ட படங்களை தியேட்டரில் மட்டுமே ரசித்துப் பார்க்க முடியும் . தியேட்டர்காரர்கள் வசதி செய்யாமல் அதிக ரேட்டில் கொள்ளை அடிப்பதால்தான் கூட்டம் குறைகிறது . சென்னை போன்ற நகரங்களில் நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று வந்தால் செலவு மற்றும் கால விரயம் அதிகம் . இவர்களுக்கு dth ஒரு வரப்பிரசாதம். எத்தனை பேர் ஆயிரம் ரூபாய் கொடுத்து dth ல் படம் பார்ப்பார்கள் ? எப்படியும் ஓரிரு நாட்களில் திருட்டு dvd வரத்தான் போகிறது. அவசரப்படுபவர்கள் ஆயிரம் ரூபாய் செலவு செய்யட்டுமே .
Rate this:
ராமசந்திரன் - thanjai,இந்தியா
08 ஜன, 2013 - 18:22 Report Abuse
 ராமசந்திரன் பெரும்பாலான தியேட்டர்கள் தற்போது ஈ ஒட்டும் நிலையிலேதான் உள்ளன. DTH ல் படங்கள் ரிலீஸ் ஆனால் இவை எல்லாம் apartment ஆவது உறுதி.இந்த நிலைக்கு theatre ஓனர்களின் பேராசையே காரணம் என்பது நிதர்சனம்.
Rate this:
மரைக்காயர் - dubai,இந்தியா
08 ஜன, 2013 - 00:11 Report Abuse
 மரைக்காயர் படம் ஊத்திக்க போகுதுன்னு சொல்றவங்க எல்லாம் பிறகு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்குவான்
Rate this:
முரளி - coimbatore,இந்தியா
07 ஜன, 2013 - 19:10 Report Abuse
 முரளி கமல் சார் அல்ல தி பேஸ்ட்...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in