விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள படம் ஆதிபகவன். பாங்காக் பின்னணியில் கதை தயாரகி உள்ளது. ஜெயம் ரவி இரண்டு ரோலில் நடித்துள்ளார். நீது சந்திராவுக்கும் பாங்காக்கில் நடக்கும் ஒரு சம்பவத்துக்கும் இடையே கதை பின்னப்பட்டுள்ளது. இந்தபடம் மூலம் அமீர் முதல் முறையாக காமர்சியல் படத்தை கையில் எடுத்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீடு கனடாவில் நடைப்பெற்றது. கனடா சென்ற படகுழுவினர், அந்த இடத்தில் அமீரை வைத்து ஒரு ப்ரொமோ சாங் எடுத்து வந்துள்ளனர். அந்தபாடலை கரு.பழனியப்பன், ஜனநாதன், எஸ்.டி.சபா ஆகியோர் இயக்கி உள்ளனர். அந்த பாடல் மற்றும் திரை முன்னோட்டத்தை வருகிற 10-ம் தேதி சென்னையில் வெளியிட உள்ளனர். ஏற்கனவே யுவன் இசையில் ஆதிபகவன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியுள்ளது குறிப்பிடதக்கது. ஆதிபகவன் படம் இந்தமாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.