Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவியுடன் மோதும் ஹாலிவுட் நடிகர்...!

03 ஜன, 2013 - 12:04 IST
எழுத்தின் அளவு:

ஜெயம்ரவி, த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். எஸ்.பி.ஜனனாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை பகுதியில் வாழ்ந்த குத்துச் சண்டை வீரர்களின் கதை. ஜெயம்ரவி பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகரும், குத்துச் சண்டை வீரருமான நேதன் ஜோன்ஸ் நடிக்கிறார். இதற்காக அவர் அடுத்த மாதம் சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் அமைக்கப்படும் செட்டில் ஜெயம்ரவிக்கும், நேதன் ஜோன்சுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது.

"கதைப்படி எதிர் கோஷ்டிகளால் குத்துச் சண்டையில் ஜெயம்ரவியை தோற்கடிக்க முடியாது. அவர்கள் வாடகைக்கு கொண்டு வரும் ஆள்தான் நேதன் ஜோன்ஸ். படம் சம்பந்தமான ஆராய்ச்சியில் இருந்தபோது நம்ம ஊர் குத்துசண்டை வீரர் ஒருவருடன் ஒரு வெள்ளைக்காரர் மோதுவது போன்ற புகைப்படம் கிடைத்தது. அந்த படம் பற்றி விசாரித்தபோது ஜெயிக்க முடியாத அவரை  வெளிநாட்டில் இருந்து ஆள் கொண்டு வந்து ஜெயித்ததாக சொன்னார்கள். அதை அப்படியே படத்தின் கிளைமாக்சாக மாற்றிவிட்டேன்"  என்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

srinivasan - minjur  ( Posted via: Dinamalar Android App )
04 ஜன, 2013 - 07:54 Report Abuse
srinivasan pavam namma hero ana powerful hero m.kumaran son of mahalakyshmi padathula varamari sandai kaitchikal irukuma!! illa kai kuaukal irukuma???????????????
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
03 ஜன, 2013 - 16:21 Report Abuse
 மொக்கையன் இவர் ஜெயம் ரவி கிட்ட அடி வாங்க போறாரா ... செம காமெடி ...
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
03 ஜன, 2013 - 15:58 Report Abuse
 பயில்வான் எப்டியும் இவன் நம்ம நோஞ்சான் ஹீரோவிடம் மிதிபட்டு ரத்தம் கக்கி சாவான் .... ஹிஹி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in