Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய்பீம் நிஜ நாயகிக்கு வீடு கட்டித்தரும் எண்ணம் : முடிவை மாற்றிய லாரன்ஸ்

27 டிச, 2021 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Constructing-house-to-Jaibhim-real-heroine-:-Raghava-lawrence-change-his-decision

சூர்யா தயாரித்து, நடித்து வெளியான ஜெய்பீம் படம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருளர், பழங்குடியினர் படும் துன்பங்களை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்தப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். தா.செ.ஞானவேல் இயக்கி இருந்தார்.

பின் கதையின் நாயகி நிஜ செங்கேணியான பார்வதி அம்மாளுக்கு பலரும் உதவ முன்வந்தனர். குறிப்பாக ராகவா லாரன்ஸ் அவரை நேரில் சந்தித்து வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார். அதன்பிறகு சூர்யா பார்வதி அம்மாள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கினார்.

இந்த நிலையில் பார்வதி அம்மாள் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை கைவிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு, பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன்.

பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன்படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

பார்வதி அம்மாவின் இன்றைய வறுமைநிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தை கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
படிக்க இடம் தராத கல்லூரிக்குள் நடிகையாக நுழைந்த மீனாட்சிபடிக்க இடம் தராத கல்லூரிக்குள் ... மீண்டும் தயாரிப்பாளராக இளையராஜா ? மீண்டும் தயாரிப்பாளராக இளையராஜா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
02 ஜன, 2022 - 17:46 Report Abuse
Ravi கடமைப்பட்ட, பணம் பண்ணிய சூர்யா செய்ய வேண்டிய வேலை இது. அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தையும், லாரன்ஸின் சொந்த பணத்தையும் வீணடிக்கவேண்டிய தேவையில்லை. கோடி கோடியாக பார்வதியின் கதையை வைத்து சம்பாதித்த சூர்யாவின் தார்மீக பொறுப்பு இது
Rate this:
sankaranc - chennai,இந்தியா
28 டிச, 2021 - 18:17 Report Abuse
sankaranc Ragava larenz has mind of god
Rate this:
28 டிச, 2021 - 14:27 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பாராட்டலாம்
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2021 - 10:01 Report Abuse
santhosh வீடு கட்ட நிலம் எல்லாம் இருக்கு பாவம் ஏழைங்க
Rate this:
sankar - Nellai,இந்தியா
28 டிச, 2021 - 08:57 Report Abuse
sankar சினிமாக்காரன் சொல்லித்தான் செய்யணுமா - இத்தனைநாள் அந்த நல்ல மனம் ஹேங்கரில் தொங்கியதா தம்பி - நல்ல புருடா விடுறீங்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in