Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛புருஷர்'களை புலம்ப வைத்த ‛புஷ்பா' : பதற வைத்த பாடல் வரிகள்

14 டிச, 2021 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Pushpa---Samantha-song-:-Oppose-in-Tamilnadu-too

சென்னை : புஷ்பா படத்தில் சமந்தா ஆடி உள்ள ஓ சொல்றியா பாடல் ஆண்களை தவறாக சித்தரிப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஆண்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள ‛பான்' இந்தியா படம் புஷ்பா. டிசம்பர் 17ல் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் நடிகை சமந்தா ஆடி உள்ள கவர்ச்சி குத்தாட்ட பாடலான ஓ சொல்றியா மாமா என்ற பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சந்திரபோஸ் (தெலுங்கு) மற்றும் விவேகா (தமிழ்) ஆகியோர் எழுதியுள்ள இந்த பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடி உள்ளார். 20 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் ஆண்கள் சமுதாயத்தையே மிகவும் மோசமாக சித்தரிக்கும் விதமாக இருப்பதாகவும், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆண்கள் சங்கம் இந்த பாடல் ஆண்களை தவறாக சித்தரிக்கிறது, இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் உள்ளது என கூறி இந்த பாடலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பாடலை பாடிய ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவுவிஜய் சேதுபதி நேரில் ஆஜராகி ... 4 மணி நேரம் விமானத்தில் சிறைவைக்கப்பட்ட ரோஜா 4 மணி நேரம் விமானத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Pradeesh Senthamarai - tokyo,ஜப்பான்
15 டிச, 2021 - 08:12 Report Abuse
Pradeesh Senthamarai பீப் சோங்க்கு தூக்கிய பூக்கள் எங்கே காணோம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
15 டிச, 2021 - 05:15 Report Abuse
meenakshisundaram இந்த ப்பாடலின் கருத்தும் இந்த சமூகத்தில் வாழும் நபர்களால் இந்த சமூகத்திலிருந்து தான் எடுக்கப்பட்டுள்ளது -முடிவு ?சமூகம் தவறானவர்களால் நடததப்படுவதாலேயே
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 டிச, 2021 - 21:28 Report Abuse
Mirthika Sathiamoorthi ஹஹஹஹஹ...இந்த பாட்டோட Youtube கமெண்ட் கொஞ்சம் படிச்சுப்பாருங்கட கிடத்தட்ட 6000 கமெண்ட்ஸ்... கருத்து போட்டவன் எல்ல ஆம்பளைங்க.. ஒருத்தன்கூட இது எங்கள் மனசை புண்படுத்திடுச்சுன்னு சொல்லவே இல்லை.. எங்க இருந்துட வரீங்க? ஏதாவது பிரச்னை கிடைக்குமான்னு காலெண்டர் பாக்குறீங்க இல்லைன்னா குறியீடு பாக்குறீங்க..புதுசு புதுசா கெளம்புற்றங்கய்யா.. பிரச்னை பண்னும்ன்னா போயி பாட்டெழுதுனவன் வீட்டுவாசலில் உக்காருங்க. காமெடி தாங்க முடியலை. நாடு நல்ல போயிட்டு இருக்கு..இதுல பத்திரிகை காமெடிவேர தமிழகம் எங்கும் எதிர்ப்பு வலிக்குதாம். 30 பேர்தாண்ட இருப்பானுக? இந்த 30 பேர்தான் மொத்த தமிழகத்தின் பிரதிநிதி? இவனுக எதிர்த்த மொத்த தமிழகமும் எதிர்க்குதுன்னு அர்த்தமா...அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு தேர்தல்..இவனுக யாரோ கைகாட்டுறாங்களோ அவர்தான் அடுத்த முதல்வர்.. இவனுக தேர்ந்தெடுத்த மொத்த தமிழகமும் தேர்ந்தெடுத்த மாதிரி இல்லை..சரிதானே பத்திரிக்கை ஆபிசர்?
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
15 டிச, 2021 - 13:28Report Abuse
தமிழன்டேய் உனக்கெல்லாம் உயிர்வாழ என்ன தகுதி இருக்கு சதியமூர்த்தி??? உன் அக்காவையோ தங்கச்சியையோ இப்படி அறைகுறையா ஆட வை. அப்புறம் தெரியுன்டா...
Rate this:
Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
20 டிச, 2021 - 18:27Report Abuse
Krishnan Periyasamyஇளையராஜா கூடத்தான் நேத்து ராத்திரி அம்மா னு ஒரு பாட்டு போட்டாரு ஏன் அதை தடை பண்ண சொல்லுங்க. சும்மா பாட்ட பாட்ட பாருங்க .........
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
14 டிச, 2021 - 20:03 Report Abuse
தாமரை மலர்கிறது படத்தை படமாக பாருங்கள். எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதை பெரிதுபடுத்தி, விளம்பரம் தரவேண்டாம். இந்த ஒரு பாடலால் தான் சமூகம் குட்டிச்சுவர் ஆகிவிடும் என்றால், அப்படிப்பட்ட வீக்கான சமூகம் அல்ல நமது. ஹீரோக்கள் எல்லோரையும் ரட்சகர்களாக நினைத்து கொண்டிருப்பது போன்ற மாயை தான் இது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in