Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மிஸ்டுகால் பிரச்சினையை சொல்லும் படம்!

Vidiyum Varai Pesu!

தீண்ட தீண்ட என்ற படத்தை இயக்கிய ஏ.பி.முகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கும் படம் விடியும் வரை பேசு. அனித் ஹீரோவாகவும், நன்மா, வைதேகி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மிஸ்டுகாலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் படமாம். அதுபற்றி இயக்குனர் முகன் கூறியதாவது: செல்போனை கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். மிஸ்டுகாலை கண்டுபிடித்தவன் தமிழன். கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு வரும் இளைஞனுக்கு ஒரு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசினால் ஒரு இளம் பெண் பேசுகிறாள். பார்த்துக்கொள்ளாமலே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பேச்சை கேட்ககாவிட்டால் இவனுக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிறது. இப்படிப்போகும் கதையில் கடைசியில் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். இன்றைக்கு பாதி பாலியல் தவறுகளுக்கு காரணம் பெண்கள் என்றால் செல்போன். ஆண்கள் என்றால் மது இதை ஆணித்தரமாக சொல்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிறார். 

Tags »
மிஸ்டுகால், பிரச்சினை, சொல்லும், படம், Vidiyum Varai Pesu,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

sarathkumar - kattumannarkoil  ( Posted via: Dinamalar Windows App )
2012-12-29 19:02:04 Report Abuse
sarathkumar இதே மாதிரி முகம் பார்க்காம லவ் பண்றத வச்சி படம் வந்தாச்சே யா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
எஸ்.பானு - gummidipundi,இந்தியா
2012-12-29 11:49:45 Report Abuse
 எஸ்.பானு இப்படிதாங்க நம்ம போனுல மிஷ்சுடு கால் நம்பர டயல் பண்ணினேன். அது நேரா குத்து ரம்யாவுக்கு கனக்ட்டு ஆயிடுச்சு. அவிக ராங்கு நம்பர்னு திட்டாத குறையா வெச்சிட்டாவ. பொன்னா இருந்தனால தப்பிச்சேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in