அபிமானிகளின் நெஞ்சில் பால் வார்த்த சமந்தா! | தனக்கான பாணியை உருவாக்கும் இரும்புக்குதிரை அதர்வா! | பாகம் இரண்டு, ஆனால் கதை வேறு! கமல் மட்டும் விதிவிலக்கு!! | செல்லப் பிராணிக்கும் மேக்கப்பா? த்ரிஷாவின் டுவிட்ஸ் | கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்தாரா நடிகர் ஷாருக்? | ராம்கோபால் வர்மாவின் புதிய கண்டுபிடிப்பு | விரைவில்..."துர்யோதனா ஆபரேஷன்-2 | மீண்டும் பிசியான சினேகா | த்ரிஷாவுக்கு டாட்டா அமலா பாலுக்கு ஓ.கே., | சிம்பு எழுதி பாடிய குட்டிபயலே பாடல் |
தற்போது தெலுங்கில், "நீதானே என் பொன் வசந்தம் மட்டுமின்றி, "எதோ வெளிப்போயிந்தி மனசு என, சமந்தா நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அவர். "தெலுங்கை பொறுத்தவரை எனக்கு எப்போதுமே ஹிட்தான். அதோடு, அங்கு தான் எனக்கு பிடித்தமான, பொருத்தமான வேடங்களும் கிடைக்கின்றன. நான் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணமும் இது தான் என்கிறார், சமந்தா. தமிழில், "கடல், ஐ என, இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், தன்னால் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதே சமயம், "எப்போதோ நடந்து முடிந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போகிறேன் என்றும் சொல்கிறார் சமந்தா.