நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் |
கமலஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 11ந் தேதி வெளிவருகிறது. அதற்கு முன்னதாக படத்தை 10ந் தேதி இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார். இதற்கு தியேட்டர் அதிபர்களும், கேபிள் ஆபரேட்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தியேட்டர் அதிபர்கள் "கமலுக்கு இனி ஒத்துழைப்புத் தரமாட்டோம்" என்று அறிவித்திருக்கிறார்கள். கேபிள் ஆபரேட்டர்கள் "படத்தை பொது இடத்தில் திரையிட்டு மக்களை பார்க்க வைப்போம்" என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் கமல் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறார். ஏர்டெல், வீடியோகான், டிஷ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல டிடிஎச்களுடன் இதற்கான ஒப்பந்தத்தை செய்திருக்கிறார் கமல்.
இதுகுறித்து நேற்று (28ந் தேதி) ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் கமல் பேசியதாவது: நான் புதிதாக எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்புவது ஒன்றும் புதிதில்லை. ஒன்றை புரிந்த கொள்ள வேண்டும், அவர்கள் என்னை எதிர்க்கவில்லை, என் முயற்சியைத்தான் எதிர்க்கிறார்கள். தொலைக்காட்சி என்ற ஒரு சாதனம் வரும், இணைய தளம் வரும் என்று 30 வருடங்களுக்கு முன்பு நான் சொன்னபோது அப்படிச் சொன்னதுக்காக மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள். அதுமாதிரிதான் இதுவும். என் படத்தை திரையிடாத தியேட்டர்காரர்கள்தான் எதிர்க்கிறார்கள். 390 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். பொது இடத்தில் திரையிடுவோம் என்று சிலர் சொன்னார்களாம். இது பூட்டிய கடைக்குள் புகுந்து திருடுவதற்கு சமம். அதை போலீஸ் பார்த்துக் கொள்ளும்.
இந்த முயற்சியால் திருட்டு விசிடிக்காரர்கள், சினிமாவை கள்ளச் சந்தையில் விற்பவர்களுக்கு பணம் போகாது. படைப்பாளிக்கு பணம் வரும். ஆனால் இங்குள்ளவர்கள். திருடன் கொண்டுபோனாலும் போகட்டும், உடையவன் ஒரு பைசா கொண்டு போகக்கூடாது என்று நினைக்கிறார்கள். யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நானே சொந்தமாக வெளியிடுகிறேன். நான் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும். கடனில் இருப்பதாகவும் மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லவில்லை. இப்போதும் ஆடி காரில்தான் வருகிறேன். நெருக்கடி என்பது எல்லோருக்கும் வரும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு கமல் கூறினார்.
இன்று இரவு (29ந் தேதி) சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ராஜ்கமல் பிலிம்சுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் திரையிட கமல் முடிவு செய்திருக்கிறார். கமலுக்கு பெருகி வரும் இந்த ஆதரவால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
IF YOU ARE A GENIUS YOU SHOULD PLAN ALL THE BUSINESS OPPURTUNITIES ON A SMOOTHER WAY NOT LIKE A ANGRY MAN,SEE SIR YOU HAVE BEEN GREW ONLY WITH THE SUPPORTERS LIKE AUDIO COMPANIES,THEATRE OWNERS,DISTRIBUTORS,FINANCIERS,ESPPECIALLY PRODUCERS,SO PLEASE SIT WITH ALL OF THE PEOPLES AND DISCUSS ON A GROUNDED DEAL,SIR DTH NETWORK ARE THE NEXT GEN BUT DONT FORGET THE OLD THINGS,COME UP WITH OLD AND NEW, NOT WITH ONLY NEW PEOPLES,REMIND THEY ARE CORPORATES NOT OWNERS.THE CORPORATES NOT RESPONSIBLE FOR YOUR 50 YEARS GROWTH,THEY ARE GETTING YIELD FROM OTHERS CROPS.