நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |

நடிகை பிந்து மாதவி, நடிகர் விஜயின் தீவிர ரசிகையாம். சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இயக்குனர், சினேகா பிரிட்டோ, நடிகர் விஜயின் உறவினர். இந்த படத்துக்கான, பாடல் காட்சி, படமாக்கப்பட்டபோது, திடீரென, ஷூட்டிங் பார்ப்பதற்காக, விஜய் அங்கு வந்து விட்டார். அந்த பாடல் காட்சிக்காக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவிக்கு, விஜயை பார்த்ததும், கையும், ஓடவில்லை; காலும் ஓடவில்லை. "விஜய், கிளம்பிச் சென்ற பின், டான்ஸ் ஆடுகிறேனே... ப்ளீஸ் என, இயக்குனரிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாராம். ஆனால், விஜயோ, "அந்த பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் டான்ஸ் ஆடினால் தான், இங்கிருந்து கிளம்புவேன் என, கண்டிப்பாக கூறி விட்டாராம். வேறு வழியில்லாமல், சமாளித்துக்கொண்டு, அந்த பாடல் காட்சியில், டான்ஸ் ஆடி முடித்தார், பிந்து மாதவி. "நன்றாக டான்ஸ் ஆடுகிறீர்கள். உங்களுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது என, பாராட்டி விட்டுச் சென்ற பின் தான், பிந்து மாதவிக்கு, மூச்சே வந்ததாம்.