நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
கோர்ட்டு வழக்கின் காரணமாக கமலின் விஸ்வரூபம், மற்றும் விஷாலின் சமர் படங்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. டிடிஎச்சில் விஸ்வரூபத்தை ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இப்போது புதிதாக ஒரு சிக்கலும் சேர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கமல் 100 கோடி செலவில் மர்மயோகி என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இதனை தனது ராஜ்கமல் பிலிம்சுடன் இணைந்து சாய்மீரா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கும் என்று ஒப்பந்தம் போட்டார். சாய்மீரா நிறுவனத்திடமிருந்து 4 கோடி ரூபாய் முன்பணமாகவும் பெற்றுள்ளார். பிறகு அந்தப் படத்தை டிராப் செய்து விட்டார். தற்போது விஸ்வரூபம் வெளிவரும் நிலையில். ஏற்கெனவே பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்ககும் சாய்மீரா நிறுவனம் தற்போது நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 50 லட்சமாக திருப்பித் தரவேண்டும் என்று நீதி மன்றத்திற்கு சென்றுள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் வருகிற ஜனவரி 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறது.
இதேபோலத்தான் விஷால் நடிக்கும் சமர் படத்துக்கும் பிரச்சினை. சமர் படத்தின் படப்பிடிப்புக்காக ஆனந்த் சினி சர்வீஸ் நிறுவனத்திடமிருந்து உபகரணங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதன் வாடகை பாக்கி ஒரு கோடியே 20 லட்சத்தை கட்டாமல் படத்தை திரையிட முயற்சித்துள்ளனர். இதனால் ஆனந்த் சினி சர்வீஸ் நிறுவனத்தின் பங்குதாரார் மனோகர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தங்களுக்கு சேர வேண்டிய வாடகை பாக்கியைத் தந்த பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்ற கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் சமர் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டிசம்பர் 28ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து விட்டு. இப்போது வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளனர்.