Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு டாக்டர் - ஆக்டர்!

27 டிச, 2012 - 16:32 IST
எழுத்தின் அளவு:

மதுரையில் பெரிய மருத்துவமனை கட்டி சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்ப்பவர் டாக்டர் பி.சரவணன். இவர் நடித்து நாளை(28.12.12) உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் படம் "அகிலன்"! ஸ்பாட்லைட் சினி கிரியேஷன்ஸ் எனும் புதிய பேனரில் டாக்டர்.பி.சரவணனே தயாரிக்கவும் செய்திருக்கும் இப்படத்தை ஹென்றி ஜோசப் எனும் புதியவர் இயக்கி இருக்கிறார். "திருடா திருடி" முதல் "யோகி" வரை இயக்குனர் சுப்ரமணிய சிவாவிடம் உதவியாளராக இருந்த ஹென்றி இயக்கி இருக்கும் முதல்படம் தான் "அகிலன்".

இதுநாள் வரை வெளிவந்த போலீஸ் கதைகளில் வித்தியாசமானதாக உருவாகி இருக்கும் அகிலன் படத்தில் போலீஸ் அதிகாரி அகிலனாக நடித்திருக்கும் டாக்டர் பி.சரவணன் ஜோடியாக புதுமுகம் வித்யா நடித்திருக்கிறார். டாக்டர் பி.சரவணன் - விதயா ஜோடியுடன் இளம் ஜோடிகள் அம்ரித் - லீமா, கஞ்சா கருப்பு, ரவிபால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில் "மன்மத லீலையை வென்றார் உண்டோ..." ரீ-மிக்ஸ் பாடல் படத்தின் பெரும் ஹைலைட் என்கிறார் இயக்குனர் ஹென்றி ஜோசப்!

ஆக்ஷ்ன், காதல், காமெடி, சென்டிமென்ட் என்று ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் அகிலன் படத்தின் கதை பெரும்பாலும் இரவில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் தன் மருத்துவ சேவை தொழிலுக்கு எந்தவித மாசுமின்றி இரவு நேரங்களில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு டாக்டர் பொளந்து கட்டியிருக்கிறாராம்! நாளை(28.12.12) அதையும் பார்ப்போம்! ஆல் தி பெஸ்ட்!

Advertisement
2012ல் செஞ்சுரி அடித்து நா.முத்துக்குமார் சாதனை2012ல் செஞ்சுரி அடித்து ... நீர்ப்பறவைக்கு விருது கிடைக்கவில்லையே- சீனுராமசாமி வேதனை நீர்ப்பறவைக்கு விருது ...


வாசகர் கருத்து (10)

சரவணா ஸ்டோர்ஸ் - Angaadi Theru ,ஆன்டிகுவா & பார்புடா
30 டிச, 2012 - 06:33 Report Abuse
 சரவணா ஸ்டோர்ஸ் சரவணா வந்தோமா ஊசிய போட்டோமா அப்படின்னு போயிகிட்டே இருக்கோணும் அதுக்கு மேல வேறு ஒன்னும் வேணா
Rate this:
karthik - chennai  ( Posted via: Dinamalar Android App )
29 டிச, 2012 - 15:17 Report Abuse
karthik அடேய் ஒருத்தன் போச்டர் அடிக்கறது பத்தத இப்ப நீ வேறயா
Rate this:
antony - ilaysnkudi  ( Posted via: Dinamalar Android App )
28 டிச, 2012 - 07:47 Report Abuse
antony பவர் ச்டார் வாழ்க
Rate this:
28 டிச, 2012 - 03:11 Report Abuse
வாசுதேவன் தமிழ் சினிமா ஆசைபட்ட அணைவரையும் அரவணைக்கும் அது டாக்டருக்கும் வைத்தி்யம் செய்யும் எல்லாம் எங்க மதுர மண்ணின் சக்தி்
Rate this:
radha - bangalore,இந்தியா
28 டிச, 2012 - 02:36 Report Abuse
 radha யாரு அந்த பவர் ஸ்டார் அவனவன் பெயர் வச்சிகிட்டு படுதுரனுகோ
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in