ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
"டெர்மினேட்டேர்-3, தி ரைஸ் ஆப் தி மெஷின் படத்துக்கு பின், "தி எக்ஸ்பென்டபிள் போன்ற, சில படங்களில், அர்னால்டு நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான், முழு வீச்சில், மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ்சில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றும், அர்னால்டு, பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியான வாழ்க்கையை தேடி, வேறு ஊருக்கு செல்கிறார். அங்கு, அவரது அமைதியான வாழ்வில், புயலடிக்கிறது. பிரபலமான போதை மருந்து கடத்தல்காரன், அர்னால்டு வாழ்வில் குறுக்கிடுகிறான். அப்புறம் என்ன? மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து, எதிரியை பந்தாட கிளம்பி விடுகிறார், அர்னால்டு. பிரபல தென் கொரிய இயக்குனர், கிம் ஜி-வுன், இந்த படத்தை இயக்கியுள்ளார். அர்னால்டுடன், பாரஸ்ட் விடேகர், ஜானி நோக்கில்வில், லூயிஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.