பரிகார பூஜை செய்த ராய் நடிகை
லட்சுமிகரமான ராய் நடிகையின் பெல்காம் வீட்டில் அவருக்காக பரிகார பூஜை ஒன்று நடந்திருக்கிறது. 2013ம் ஆண்டு அவருக்கு ஒரு பெரிய கண்டம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை ஒன்று நடத்த வேண்டும் என்றும் குடும்ப ஜோதிடர் கொழுத்திப்போட பயந்துபோன ராயின் பெற்றோர்கள் அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னையில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்தவர் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு பெல்காம் பறந்து திருப்பியிருக்கிறார். திரும்பி வந்தவர் காலில் பெரிதாக கருப்பு கயிறு ஒன்று புதிதாக கட்டப்பட்டிருந்தது. விபரம் கேட்டவர்களிடம் "சும்மா திருஷ்டிகளிப்புதான்" என்று சொல்லியிருக்கிறார். "பரிகார பூஜைக்குதானே போய்விட்டு வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு "அப்படியெல்லாம் இல்லை. என் அக்கா திருமணம் நடக்க இருக்கிறது. எங்க குடும்ப வழக்கப்படி திருமணம் நல்லபடியா நடிக்க யாகம் ஒன்று நடத்துவோம். அதற்குத்தான் போயிட்டு வந்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.
எதுவா இருந்தாலும் அழகுக்கு ஆபத்து வராம இருந்தா சரி...!!