சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
ராட்டினம் படத்தில் அறிமுகமான ஜோடி லகுபரன்-ஸ்வாதி. அந்த படத்துக்குப்பிறகு அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஒருவர் மீது இருவர் சாய்ந்து. இந்த படத்திற்கு முதலில் ஸ்வாதியைத்தான் நாயகியாக புக் பண்ணியிருக்கிறார் படத்தின் இயக்குனர் பாலசேகரன். அதையடுத்து அவர் ஹீரோ தேடியபோது, ஸ்வாதிதான் லகுபரன் நன்றாக நடிப்பார் என்று அவர் பெயரை சிபாரிசு செய்திருக்கிறார். அதுவரை லகுபரனைப்பற்றி எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்த பாலசேகரன், அதன்பிறகுதான் அவரை அழைத்து பேசி படத்தில் கமிட் பண்ணியிருக்கிறார். ஆக, ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் லகுபரன் நடித்துள்ளதற்கு பின்னால் ஸ்வாதியின் வலுவான சிபாரிசும் உள்ளது.
இந்தநிலையில், இப்போது தனக்கு சிபாரிசு செய்த ஸ்வாதிக்கு பிரதிபலன் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் லகுபரன். அதனால், தான் சான்ஸ் கேட்டு தேடிச்செல்லும் கம்பெனிகள், தன்னை தொடர்பு கொள்ளும் கம்பெனிகள் எதுவாக இருந்தாலும், அவர்களிடத்தில் ஸ்வாதியின் பெயரையும் முன்வைக்கிறார். அவர்தான், கிளாமருக்கு ஏற்ற நடிகை இல்லையே என்று இயக்குனர்கள் தயங்கினால், ஆனால் அவரிடத்தில் நல்ல திறமை இருக்கிறது சார். எனக்கு தெரிஞ்ச வரை இப்போதைக்கு நடிப்புல அவரை அடிச்சுக்க நடிகை இல்லை என்றும் பில்டப் கொடுக்கிறாராம்.
இதனால், லகுபரனை புக் பண்ணும் யோசனையில் இருப்பவர்களும், தேவையில்லாமல் நடிகையின் பெயரை முன்வைத்து அவரையும் புக் பண்ண கட்டாயப்படுத்துவதால் அவரையே ஏறக்கட்டி விடுகின்றனர். ஆக, இப்படி நடிகைக்காக தனக்கு வர இருக்கும் வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார் நடிகர்.