சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
சுந்தரபாண்டியன், கும்கி படங்களில நடித்துள்ள லட்சுமிமேனன் நடித்த முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகி விட்டதால் சந்தோசத்தில் பூரித்துப்போய் இருக்கிறார். ஆனால் மனதில் உள்ள இந்த சந்தோசம் இப்போது உடம்பு வரை தாக்கி அவரையும் பூதாகரமாக்கி விட்டது. குட்டிபுலி படத்தில் நடிக்க கோடம்பாக்கத்துக்கு விசிட் அடிக்கும் அவரைபார்ப்பவர்கள், கும்கி படத்துல நடிச்ச நீயும் கும்கி யானையாட்டம் உடல் பெருத்து விட்டாயே? என்று கிண்டல் அடிக்கிறார்களாம்.
இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் லட்சுமிமேனன். அவசர அவசரமாக தனது உடல் எடையைப்பார்த்தவர், ஏற்கனவே இருந்ததை விடவும் 10 கிலோ வரை கூடியிருப்பதைக்கண்டு மேலும் ஷாக்காகி இருக்கிறார். இப்படியே விட்டால் உடம்பை கம்மி பண்ணுவது கடினம் என்று இப்போது தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார். இதுவரை ஸ்பாட்டில் கிடைக்கிற அனைத்து வகை நான்வெஜ் உணவுகளையும் கலந்துகட்டி அடித்து வந்த லட்சுமிமேனனுக்கு, இப்போது அந்த மாதிரி உணவுகளை கண்ணிலேயே காட்டுவதில்லையாம் அவரது தாய்குலம். உடம்பில் சதை போடாத பியூர் வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே கால் வயிறு, அரை வயிறு என்று தருகிறாராம் என்றாலும் ஏறின உடம்பு இறங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறதாம்.