அதிரடி நடிகையாக தயாராகி விட்டேன்-பானு
ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் அறிமுகமானவர் பானு. அந்த படம் வந்த நேரத்தில் அடுத்த நயன்தாரா என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டார் பானு. இடையிடையே சில படங்களில் நடித்தபோதும் அவை பானுவே பேச வைக்கவில்லை. இந்த நிலையில், தற்போது வசந்த் இயக்கத்தில் நடித்துள்ள 3 பேர் 3 காதல் படத்திலிருந்து பரபரப்பான நடிகையாகி விட வேண்டும் என்கிற கோணத்தில் பில்டப் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதனால், புதிய படவிசயமாக படாதிபதிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தி வரும் பானு, கதைக்கேற்ப அதிரடி கிளாமரை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறேன் என்று முன்மொழிந்து வருகிறார். எந்த ரேஞ்சுக்கு கிளாமர் காட்டுவீர்கள்? என்று அவர் கேட்டால், கதைக்கு என்ன கேட்கிறதோ அதுவரை என்றும் சொல்லி கண்ணடிக்கிறாராம். இதனால் பானு வியாபார யுக்தியை புரிந்து கொண்ட நடிகையாகிவிட்டார் என்று நினைக்கும் சில படாபதிபதிகள் அவரையும் கவர்ச்சி ரேஸில் இறக்கி விட ஆயத்தமாகி வருகின்றனர்.