மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
"சயீப் அலிகானை திருமணம் செய்தபின், ரொம்பத் தான் மாறி விட்டார், கரீனா கபூர் என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள். அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் இருந்தால், அந்த படத்தில் நடிக்க முடியாது என, உதட்டை பிதுக்கி விடுகிறாராம். "ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள, கதையாக இருந்தால், சொல்லுங்கள், கேட்கலாம் என்கிறாராம். இப்படித் தான், வட மாநிலத்தை சேர்ந்த, ஒரு "டிவி நிறுவனம், "புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகிறோம். அதில், ஒரு குத்துப்பாடலுக்கு, நீங்கள், நடனமாடினால் நன்றாக இருக்கும். உங்களுடன், சல்மானும் ஆடுகிறார் என, கரீனாவை, அணுகியுள்ளனர். அவர்களை முறைத்துப் பார்த்த, கரீனா, "குத்துப் பாடலா...? டான்ஸ் ஆடணுமா... நோ வே என, கதவைச் சாத்தி விட்டாராம். இந்த தகவல் அறிந்ததும், சல்மான் கானே, கரீனாவை தொடர்பு கொண்டு, டான்ஸ் ஆடும்படி வற்புறுத்த, வேறு வழியின்றி, டான்ஸ் ஆட சம்மதித்துள்ளார், கரீனா.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது,"இனிமேல், குத்துப் பாடலுக்கு ஆடுவதெல்லாம், நன்றாக இருக்காது. அதனால் தான், மறுத்தேன். ஆனால், சல்மான் கான் மீது, நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் கேட்டுக் கொண்டதால், டான்ஸ் ஆட சம்மதித்தேன் என்கிறார்.