தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
என் வளர்ச்சியை தடுப்பதற்காக சிலர் வதந்தியை பரப்பி விடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார். நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மும்பை பட உலகில் செய்திகள் பரவி வருகின்றன. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. இதையடுத்து கோபமடைந்த அசின், மும்பையில் நிருபர்களை அவசரமாக சந்தித்து பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முட்டாள்தனமானது ஆகும். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. இந்த சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று எனது வாழ்க்கையை நாசம் செய்ய நான் விரும்பவில்லை. சினிமாவில் நான் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. விருதுகள் வாங்க வேண்டியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறவும் லட்சியம் உள்ளது. இவற்றில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இந்த லட்சியங்கள் நிறைவேறிய பிறகுதான் திருமணம் பற்றி சிந்திப்பேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சினிமா, குடும்பம் என்று இரண்டு இடத்திலும் கால் வைக்கமாட்டேன். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன், என்றார்.