வளர்ச்சியை தடுக்க வதந்தி பரப்புவதா? அசின் ஆவேசம்! - Somebody spreading rumours about me says Asin
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வளர்ச்சியை தடுக்க வதந்தி பரப்புவதா? அசின் ஆவேசம்!

26 டிச,2012 - 11:37 IST
எழுத்தின் அளவு:

என் வளர்ச்சியை தடுப்பதற்காக சிலர் வதந்தியை பரப்பி விடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார். நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மும்பை பட உலகில் செய்திகள் பரவி வருகின்றன. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. இதையடுத்து கோபமடைந்த அசின், மும்பையில் நிருபர்களை அவசரமாக சந்தித்து பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முட்டாள்தனமானது ஆகும். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. இந்த சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று எனது வாழ்க்கையை நாசம் செய்ய நான் விரும்பவில்லை. சினிமாவில் நான் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. விருதுகள் வாங்க வேண்டியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறவும் லட்சியம் உள்ளது. இவற்றில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இந்த லட்சியங்கள் நிறைவேறிய பிறகுதான் திருமணம் பற்றி சிந்திப்பேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சினிமா, குடும்பம் என்று இரண்டு இடத்திலும் கால் வைக்கமாட்டேன். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன், என்றார்.

Advertisement
டிஸ்கோ கிளப்புகளின் சட்டவிரோத செயல்களை வெளிச்சம்போட்டு காட்டும் டிஸ்கோ கிளப்புகளின் சட்டவிரோத ... சல்மான் ஓ.கேன்னா; நானும் ஓ.கே: கரீனா!! சல்மான் ஓ.கேன்னா; நானும் ஓ.கே: கரீனா!!


வாசகர் கருத்து (1)

மொக்கையன் - chennai,இந்தியா
27 டிச,2012 - 10:55 Report Abuse
 மொக்கையன் உங்க வளர்ச்சிய தான் நான் கிலாடி 786 ல பார்த்தேனே ....
Rate this:
0 members
0 members
0 members

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film kidari
  • கிடாரி
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கிலா
  • இயக்குனர் :ப்ரசாத் முருகேசன்
  Tamil New Film Kavalai Vendam
  Tamil New Film managaram
  • மாநகரம்
  • நடிகர் : ,
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Rekka
  • றெக்க
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :இரத்தின சிவன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in