சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
வழக்கமான, போலீஸ்-வில்லன் துரத்தல் கதை தான், இதுவும். ஆனாலும், "இதற்கு முன், எந்த படத்திலும், பார்க்காத அளவுக்கு, விறு விறுப்பான காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும், இந்த படத்தில் இருக்கும் என, பயங்கரமான, "பில்டப் கொடுக்கின்றனர், படக் குழுவினர். மும்பையில், உள்ள டிஸ்கோ கிளப் உரிமையாளர்களின், சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்த, ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அதில், படு பயங்கரமான பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது தான், படத்தின் ஒன்லைன். சச்சின் ஜோஷி, கிகானா கான், ஆதித்ய பஞ்சோலி போன்ற, இந்தி பிரபலங்களுடன், நம்ம ஊர், பிரகாஷ் ராஜ், விமலா ராமன் ஆகியோரும், இந்த படத்தில் உள்ளனர். அங்குஷ் பட், படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில்,"நாட்டின், மற்ற நகரங்களிலிருந்து, மும்பை, சற்று வித்தியாசமானது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு அபாயத்துக்குள் சிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பின்னணியை பற்றித் தான், படத்தில் கூறியுள்ளோம் என்கிறார்.