சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! |
"பூ படத்தில், மாரி என்ற கேரக்டரில், கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர், பார்வதி. அதற்கு பிறகு, ஏனோ, இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது, நான்காண்டு இடைவெளிக்கு பின், பரத்பாலா இயக்கும்,"மரியான் படத்தில் நடிக்கிறார். "ஏன், இந்த நீண்ட காத்திருப்பு என, அவரிடம் கேட்டபோது,"நடிப்பை வெளிப்படுத்தும், நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கலாம் என, காத்திருந்தேன். என், காத்திருப்பு வீண் போகவில்லை. "மரியான் படத்தில், என் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும், வாய்ப்பு கிடைத்ததால், உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். தனுஷ், பரத் பாலா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப் பிரபலமானவர்களுடன், நானும் இந்த படத்தில் இருக்கிறேன் என்பது, பெருமைக்குரிய விஷயம் தானே. இனிமேல், தமிழில், எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்என, பெருமிதப்படுகிறார், பார்வதி.