Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் »

எல் - பிரெஞ்ச் மொழி படம் ஒரு பார்வை

Elles film review goa film festival specialபாரீஸ் நகரில் உள்ள பிரபல பெண்கள் பத்திரிக்கை எல். அந்த பத்திரிக்கையில் பிரபல பெண் எழுந்தாளராக இருப்பவர் அனி. பணம் சம்பாதிக்க பகுதி‌நேர செக்ஸ் தொழிலாளிகளாக இருக்கும் இளம் பெண்களை பற்றி பேட்டி கண்டு புது கதை ஒன்றை எழுத விரும்புகிறார் அனி. அதற்காக இரண்டு இளம் பெண்களை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்கிறார் அனி. அனியிடம் இளம்பெண் ஒருவர் நான் சந்திக்கும் நபர்களில் சிலர் என் தந்தைக்கு ஒப்பான வயது உடையவர்களும் இருப்பார்கள். கஸ்டமர்கள் பலவிதம். சிலர் நிறைய பேசுவார்கள். தங்களைப்பற்றி, தங்கள் மனைவியைப்பற்றி, குடும்பங்களை பற்றி எல்லாம் பேசுவார்கள். எனக்கு அவற்றின் மீதெல்லாம் அக்கறை இல்லை. அவர்கள் பேசுவது சில நேரங்களில் போரடிக்கும் ஆனாலும் பாதகமில்லை. எனென்றால் அவர்கள் என்னுடன் செலவழிக்கும் மொத்த நேரத்திற்கும்தான் தான் அவர்கள் பணம் கொடுப்பார்கள். சிலர் அழுவார்கள். சிலர் அன்புக்கு ஏங்குவார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று தனது கஸ்டமர்களை பற்றி அனிடம் சொல்லுகிறாள். இதற்கிடையே தனது பாய் பிரண்டு உடனும் அவ்வப்போது தனது நெருக்கத்தை அதிகப்படுத்தி கொள்கிறார் அந்த டீன் ‌ஏஜ் பெண். அனிக்கும், அந்த டீன் ஏஜ் பெண்ணுக்கும் ஒரு நல்ல நட்பு உண்டாகிவிடுகிறது. அந்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே உள்ள உள்ள பார்க் ரெஸ்டாரென்ட் உள்ளிட்ட இடங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள.

தன் கஸ்டமர்களில் சிலருடன் செக்ஸில் ஈடுபட்டதை அந்த பெண் உள்ளதை உள்ளபடி அனிடம் சொல்கிறார். ஓரிரு காட்சிகள் சுருக்கமாக இடம்பெறும். தன்னுடைய கட்டுரை முழுமையாகவும், உண்மையை பிரதிபலிப்பதாகவும் அதேசமயம் அந்த டீன்-ஏஜ் பெண்களுக்கு நியாயம் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அனி மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

ஒருசமயம் அனியும், அந்த பெண்ணும் பேசிக்கொள்ளும்போது உங்களுக்கும் அந்த உணர்வு வருகிறதா...? என்று அந்த டீன் ஏஜ் பெண் கேட்கும்போது அதிச்சிக்கு உள்ளாகும் அனி என்ன பேசுற...? என்பார் பதட்டமாக. இல்லை இல்லை அந்தமாதிரி கேள்வியை என்னிடம் கஸ்டமர்கள் கேட்பார்கள் என்று சொல்லி அவள் சமாளிப்பாள். அந்தரங்க விஷயங்களை பற்றி பேசினாலும் தன் கண்டிப்பையும், மரியாதையையும் அனி விட்டு கொடுப்பதில்லை.

பிரபல பிரான்ஸ் நடிகை ஜூலியட் பினோஷே பத்திரிக்கையாளர் அனியாக, யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதேபோல் டீன் ‌ஏஜ் பெண்களாக வரும் அந்த இரண்டு பெண்களும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். செக்ஸ்‌ தொழிலாளியாக நடிக்கிறோமே என்று துளியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்கள்.

பணம், செக்ஸ், சுதந்திரம், காதல் ஆகியவற்றின் இணைப்பை குறிப்பிட்டு சமுதாயத்திற்கு சில கேள்விகள் கேட்பது ‌போல இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. செக்ஸ் தொழிலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார் இப்படத்தின் பெண் டைரக்டர் மல்கோஸ்கா சுமோஸ்கா. இது இவரது ஐந்தாவது படைப்பாகும். டொரொண்டோ, பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று இருக்கிறது.


கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-

Tags »
goa film festival special, கோவா திரைப்பட விழா ஸ்பெஷல்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

Meyaluma - Paris,பிரான்ஸ்
2012-12-26 00:45:35 Report Abuse
 Meyaluma எல்லிஸ் அல்ல,எல். எல் என்றால் அவர்கள்(பெண்பால்) என்று பொருள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in