Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் அசின்!

Asin backs to kollywood
கஜினி இந்தி ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்ற அசின், அப்படத்தின் வெற்றி காரணமாக அங்கு நிலையான நடிகையானார். அங்கு கிடைத்த பெரிய வரவேற்பு, பெரிய படக்கூலி எல்லாம் சேர்ந்து அவரை முழுநேர இந்தி நடிகையாக வைத்தது. அதனால் அடுத்தடுத்து தமிழில் இருந்து சென்ற மெகா பட வாய்ப்புகளைகூட துச்சமாக மதித்து ஓரங்கட்டினார் அசின். இதனால் அதன்பிறகு யாரும் அசினை சீண்டவில்லை. இந்நிலையில், அசின் பெரிதாக நம்பிக்கொண்டிருந்த பாலிவுட் இயக்குனர்கள், அங்குள்ள குத்தாட்ட நடிகைகள் போன்று அசினையும் கடுமையாக தோலுரிக்கத் தொடங்கி விட்டார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், என்னிடம் நிறைய திறமை உள்ளது. என் திறமையை பயன்படுத்துங்கள் என்று மன்றாடியும் அவர்கள் கேட்பதாக இல்லையாம். சாதமும் வேண்டும, சாம்பாரும் வேண்டும் என்பதுபோல், நடிப்பும் வேண்டும், கவர்ச்சியும் வேண்டும் என்று சொல்லி பாடல் காட்சிகளில் துக்கடா நடிகையாக்கி வருகிறார்களாம். அதனால் இதேவேகத்தில் போனால் இன்னும் ஓரிரு படங்களோடு இத்தனை நாளும் கட்டிக்காத்த மானம் மரியாதை எல்லாத்தையும் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள் போலிருக்கே என்று மண்டை காய்ந்து போயிருக்கிறார் அசின், அதோடு, இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் காத்துக்கொள்ளும் பொருட்டு, மீண்டும் கோலிவுட் சினிமா பக்கம் ஓடி வந்திருக்கிறார் அசின். தனது ஆஸ்தான இயக்குனர்கள், ஹீரோக்களுடன் அவசர மீட்டிங் போட்டு, சான்ஸ் கேட்டு வருகிறார் நடிகை.

Tags »
Asin, அசின்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (12)

JAYA - tamilnadu super kings  ( Posted via: Dinamalar Android App )
2012-12-26 14:33:15 Report Abuse
JAYA very bad comment from Uma comment & hurt to Tamilnadu people....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
விசய் மாமா - vellore ,இந்தியா
2012-12-26 13:11:06 Report Abuse
 விசய் மாமா ஐ யம் வெய்டிங் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nijas - kandy,இலங்கை
2012-12-26 12:03:42 Report Abuse
 nijas தங்கை வேடம் தான் சரியாக இருக்கும்.. பிளச்சிக்கட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mani - chennai,இந்தியா
2012-12-26 10:46:56 Report Abuse
 mani போ டி போ இங்க யாரும் உன்ன கண்டுக்க மாடங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Karthik - Trivandrum,இந்தியா
2012-12-26 08:52:33 Report Abuse
 Karthik தமிழனுக்கு மானம் உள்ளதா என்ன? தமிழ் தமிழ் என்று கூவும் சினிமா காரர்கள் வேறு மொழி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். தேவன் நீங்கள் வேணும்னா பாருங்க தமிழ்ல முன்னணி நடிகர்கள் கூட மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in