சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! |
கே.பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து இயக்கிய படம் சித்து ப்ளஸ்டூ. இப்படத்தில் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் சாந்தினி. பாக்யராஜினி மோதிரக்கையில் குட்டு பட்டிருக்கிறோம். அதனால் பெரிய ஹீரோயினியாகி விடுவோம் என்று கனவு கண்டார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்ததால் அவரது கனவு நனவாகவில்லை. அதற்கடுத்தபடியாக அவர் நடித்த படித்துறை படம் இன்று வரை வெளியாகவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தியது கோடம்பாக்கம்.
இருப்பினும் வீட்டில் இருந்தபடியே இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு விடாமுயற்சி செய்து வந்தார் சாந்தினி. அதன்பலனாக நகுல் நடித்துள்ள நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இந்த படத்தில் கல்லூரி மாணவியான அவரை ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நகுல் காப்பாற்றுவது போன்ற கதையாம். அதனால் இருவரும் ரவுடிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஓடிக்கொண்டேயிருப்பார்களாம். ஆனால் அப்படி செல்லும்போது, பல இடஙகளில் தன்னை பற்றிக்கொண்டு ஓடி வரும் சாந்தினியை, எதிரிகளிடமிருந்து காப்பாற்ற அவரை தனது தோளில் தூக்கி எதிரிகளை பந்தாடியபடி சண்டை செய்வாராம் நகுல். அதனால் படப்பிடிப்பு முடிந்து ஒரு வாரம் வரை என் உடம்பு வலி தீரவில்லை என்கிறார் சாந்தினி.