Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரண்யா மோகன் ரிட்டன்

25 டிச, 2012 - 14:25 IST
எழுத்தின் அளவு:

தங்கச்சி பாப்பா கேரக்டரில் தமிழில் அறிமுகமானவர் சரண்யா மோகன். தொடர்ந்து தங்கச்சி கேரக்டராக வாய்ப்பு வரவே கேரளா பக்கம் போய்விட்டார். "ஞான் இப்போள் வல்லிய பெண்ணாக்கும் ஹீரோயினாயிட்டுதன்னே ஆக்ட் செய்யும்" என்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு வெண்ணிலா கபடிக் குழுவில் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு விஜய் பட வாய்ப்பு என்பதால் மீண்டும் தங்கச்சி கேரக்டருக்கு இறங்கி வந்தார். பிறகு அழகர் சாமியின் குதிரையில் ஹீரோயின் ஆனார். இப்படி மாறி மாறி நடித்து வந்த சரண்யா இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று உறுதியான முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவுக்குப் பிறகு இப்போது அவர் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் படம் "காதலைத்தவிர வேறொன்றுமில்லை". பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்குகிறார். சாட்டை யுவன் ஹீரோ. மெரீனா, பசங்க பாணியிலான சின்ன புள்ளைங்க கதையாம். டியூசன் செண்டரில் படிக்கிற சின்னப் புள்ளைங்களின் காதல் படமாம். சரண்யா மோகன் டியூசன் டீச்சராம். யுவன் அவரிடம் பாடம் படிக்க வந்து காதல் பாடம் கேட்பவராம்.

திரும்பவும் சரண்யாவை தங்கச்சி கேரக்டருக்கு அனுப்பிடாதீங்கப்பு...!

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

வா.ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
29 டிச, 2012 - 13:44 Report Abuse
 வா.ஸ்ரீனிவாசன் சரண்யா மேடம், இந்த புது வருடம் உங்களுக்கு பல வெற்றிகளை குவிக்கட்டும். தயவு செய்து எக்காரணம் கொண்டும் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் படங்களை எப்படி பட்ட ஹீரோ சொன்னலும் சரி எவ்வளவும் பேனராக இருந்தாலும் ஒப்புகொள்ளாதீர்கள்.
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
26 டிச, 2012 - 18:47 Report Abuse
 பயில்வான் அப்போ இனி மும்மாரி மழை பொழியும்
Rate this:
மொக்க விஜய் - vellore,இந்தியா
26 டிச, 2012 - 13:12 Report Abuse
 மொக்க விஜய் விஜய் அண்ணன் கூட இன்னொரு படத்துல நடி. நீ எங்கயோ போய்டுவ.
Rate this:
தங்கதுரை - bangalore,இந்தியா
26 டிச, 2012 - 09:41 Report Abuse
 தங்கதுரை கன்னட படம் ஓகே வா சரண்யா மோகன் ஒரு சான்ஸ் ரெடியா இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in