Advertisement

சிறப்புச்செய்திகள்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரமாட்டேன்! -படவிழாவில் விஷால் பேச்சு | மோகன்லால் ஜோடியாக கமாலினி முகர்ஜி ; கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இயக்குனர்...! | ரஜினிக்கு முன்னுரிமை கொடுத்த சிவராஜ்குமார் ; முணுமுணுக்கும் சாண்டல்வுட்..! | மலையாள சினிமாவின் 30 வருட 'நட்பு' கூட்டணி..! | பாயும்புலி விஷாலை உயரத்துக்கு கொண்டு செல்லும்!- ஆடியோ விழாவில் வைரமுத்து பேச்சு | நான் ஆம்பள மாதிரி! திமிரு படத்தில் மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி | என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் இருக்கிறது - புலி ஆடியோ விழாவில் பேச்சு! | மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய "பாயும் புலி" படக்குழு | திலீப் படத்தின் பெயரை மாற்றிய 'மஜா' இயக்குனர்...! | அறிவியல் பிரம்மாண்டங்களே என் விருப்பம் : கலை இயக்குனர் சாபு சிரில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏற்கனவே வெளியான படத்தலைப்பு எனது படங்களுக்கு வேண்டாம்! விஜய் முடிவு

24 டிச,2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான துப்பாக்கி படத்தின் தலைப்பு நிறைய சங்கடங்களை சந்தித்துதான் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தது. அதேபோல் தற்போது விஜய்யை வைத்து படம் இயக்கும ஏ.எல்.விஜய்யும், விக்ரமைக்கொண்டு இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் என்ற இரண்டு படங்களின் தலைப்புகளுக்காக நிறையவே போராடினார். இதில் தெய்வத்திருமகன் என்று வைத்திருந்த தலைப்பை பின்னர் தெய்வத்திருமகள் என்று மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது விஜய்யைக்கொண்டு அவர் இயக்கி வரும் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயர் வைக்க நினைத்தார். ஆனால் அந்த பெயரில் ஒரு படம் வளர்ந்து வருவதால், அடுத்து ரஜினி படத்தலைப்பான தங்கமகனை வைக்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்துவிட்டது. அதனால் வேறு ரஜினி பட தலைப்பு எதையாவது வைக்கலாமே என்று டைரக்டர் ஏ.எல்.விஜய் சொன்னபோது, ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பு வைக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய். அதோடு, படத்திற்கான கதையை வித்தியாசமாக யோசித்த நீங்களே அதற்கு பொருத்தமான தலைப்பையும் புதிதாக யோசியுங்கள் என்று கூறி விட்டாராம். அதனால் தீவிர டைட்டீல் டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ள ஏ.எல்.விஜய், தனக்கு அவ்வப்போது தோன்றும் டைட்டீல்களை விஜய்யின் காதுகளுக்கு பாஸ் பண்ணி பரிசீலனையில் ஈடுபட்டிருக்கிறார்.

Advertisement
இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாடமி விருது!!இளையராஜாவுக்கு சங்கீத நாடக அகாடமி ... மீண்டும் பிசியாகிறார் அரவிந்த்சாமி மீண்டும் பிசியாகிறார் அரவிந்த்சாமி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Payum puli
  • பாயும் புலி
  • நடிகர் : விஷால்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :சுசீந்திரன்
  Tamil New Film Haiku
  • ஹைக்கூ
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :பாண்டிராஜ்
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Kurangu kaiyil poo maalai

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in