வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
கலைதுறையில் உள்ளவர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி 2012ம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு இசைஞானி இளையராஜா தேர்வாகி இருக்கிறார். அவருக்கு சங்கீத நாடக அகாடமி விருதுடன் தாமிரபட்டயமும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இளையராஜாவுடன் சேர்ந்து வயலின் வித்வான் என்.ராஜம், இந்துஸ்தானி இசை கலைஞர் டி.ஹெச்.விநாயகராம், நடன கலைஞர்கள் ப்ரியதர்சினி கோவிந்த்(நாட்டியம்), விஜய் சங்கர்(கதக்), சர்மிளா பிஸ்வாஸ்(ஒடிசி) உள்ளிட்ட இசை மற்றும் நடனம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 36பேரும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஏற்கனவே நான்கு முறை தேசிய விருது, பத்மபூசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று இருக்கும் இளையராஜாவின் வெற்றி மணிமகுடத்திற்கு மற்றொரு மாணிக்க கல்லாக இந்த சங்கீத நாடக அகாடமி விருது ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
டி ஹெச் விநாயக் ராம் ஒரு கடம் வாசிக்கும் கலைஞர் . கர்நாடக சங்கீத வித்வான் . நல்ல வித்வான் என்பதால் ஹிந்துஸ்தானி மற்றும் பிறநாட்டு இசை கலைஞர்களுடன் கலந்து இசை நிகழ்ச்சி நடத்த வல்லவர். தயவுசெய்து திருத்தவும். இளையராஜா சாருக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . காலம் தாழ்ந்து வந்தாலும் வந்ததில் மகிழ்ச்சி. இந்திய சினிமா இசையென்னும் கிரீடத்தில் ஒரு சிறந்த ரத்தினமானவர் இளையராஜா. அவரின் இசை பயணம் தொடர ஒரு ரசிகனாக என் வாழ்த்துக்கள்.