Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் யாரையும் தாழ்த்த கூடாது - சந்தானம்

17 நவ, 2021 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Do-not-hurt-anyone-in-cinema-says-Santhanam

சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(நவ., 16) மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜெய் பீம் படமென்று இல்லை. எந்த படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக் கூடாது.

யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால், அடுத்தவர்களைத் தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேசக் கூடாது. இதுதான் என் கருத்து. ஏனென்றால், சினிமா என்பது இரண்டு மணி நேரம் எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக் கொள்ளுங்கள். ஆனால், அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.

இனிவரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும். இரண்டு மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து சாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்” என்றார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
கோவை பள்ளி மாணவி தற்கொலை - அதுல்யா ரவி வேதனைகோவை பள்ளி மாணவி தற்கொலை - அதுல்யா ... படப்பிடிப்பில் மைக் டைசன் : 'லைகர்' குழு மகிழ்ச்சி படப்பிடிப்பில் மைக் டைசன் : 'லைகர்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

meenakshisundaram - bangalore,இந்தியா
24 நவ, 2021 - 03:25 Report Abuse
meenakshisundaram சந்தானம் நல்ல கருத்தையே சொல்லி யுள்ளார் .ஆனால் அவர் இதை பின் போற்றட்டும் .ஐவரும் ஏதோ உயர்ந்த ஜாதியினரை தாழ்த்தி விமர்சனம் செயதிருந்தால் அவர் கருத்துப்படி வரும் படம் ஏதாவதோண்றில் அதே ஜாதியினரை 'உயர்த்தி 'பேச வேண்டும்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 நவ, 2021 - 05:12 Report Abuse
J.V. Iyer தைரியமாக உங்கள் கருத்தை சொன்னதற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
17 நவ, 2021 - 20:06 Report Abuse
திரு.திருராம் அப்ப 45 வருசமா ஒரு குறிப்பிட்ட சாதியை சினிமாவில் காயப்படுத்திவருவது? நீங்களும் அதில் விதிவிலக்கல்வவே?ஏ1 படம் ஒன்றுபோதுமே?
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
17 நவ, 2021 - 20:05 Report Abuse
திரு.திருராம் அப்ப 45 வருசமா பாப்பான் பாப்பான்னு ஒரு சாதியை சினிமாவில் காயப்படுத்திவருவது? நீங்களும் அதில் விதிவிலக்கல்வவே? ஏ1 படம் ஒன்றுபோதுமே?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17 நவ, 2021 - 18:39 Report Abuse
NicoleThomson அட போங்க அப்படி தான் பிழைப்பு நடத்தி கொண்டுள்ளான் பா ரஞ்சித் முதல் குள்ளன் வரை
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in